இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி பத்மநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த கிணறு சுமார் இருபது அடி ஆழம் கொண்டிருப்பதாகவும், இந்த கிணற்றின் உட்சுவர் கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.
இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் “மணி நாகன்” என்று எழுதப் பட்டிருப்பதாக தெரிவித்த பத்மநாதன், தமிழ் பிராமி எழுத்துருக்கள் கி மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டுவரையில் புழங்கியதால், இந்த கிணறும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று தாம் கருதுவதாகவும் விளக்கினார்.
இலங்கையின் பூர்வீக குடியினரான நாகர்களின் கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துருக்கள், நாகர்களும் தமிழரும் ஒன்றே என்கிற தமது கருதுகோளுக்கான மற்றும் ஒரு வலுவான ஆதாரமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார் பத்மநாதன்.
இது குறித்து அவர் பிபிசிக்கு அளித்த செவ்வியின் விரிவான ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.
http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150904_nagarlegacy
செய்திமூலம் – பிபிசிதமிழ்
மேலதிக செய்திகள் – தினச்செய்தி http://www.thinacheithi.lk/archives/26713
மட்டக்களப்பு – வந்தாறுமூலை – நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு 2ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு மற்றும் நாகக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய காணியினுள் மேற்கொண்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு, கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகக் கல் என்பன கண்டுபிடிக்கபட்டன.
மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த கிணறு சுமார் இருபது அடி ஆழம் கொண்டிருப்பதாகவும், இந்த கிணற்றின் உட்சுவர் கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் “மணி நாகன்” என்று எழுதப்பட்டிருக்கிறது.
இதுபற்றி பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகையில் –
“இலங்கையின் பூர்வீக குடியினராகக் காணப்பட்ட தமிழர் மூதாதயரான ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு நாகவம்சத்தினர் தென்னிந்தியாவின் சோழ மண்டல கடற்கரையிலுள்ள காவிரி பூம்பட்டிணம் போன்ற துறைமுகப் பட்டிணம் மூலமாக மட்டக்களப்பு தேசத்திற்கு கடல் வழிமார்க்கமாக குடியேறினர்.
இவ்வாறு கடல் வழிமார்க்கமாக வந்த ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு நாக வம்சத்தினர் ஆற்று வழிமார்க்கமாகவும், தரைவழி மார்க்கமாகவும் தங்களது குடியேற்றங்களையும் குறுநில அரசுக்களையும் நதிக்கரைக்கு அண்மையில் உள்ள உயர்வான இடங்களிலும், மலைச்சாரல்களிலும், காடுகளை எல்லைகளாகக் vantharumoola-kinaru_001கொண்ட பிரதேசங்களிலும், வில்லு புல் நிலங்களிலும், வெட்டவெளி, சமவெளி நிலங்களிலும் நிறுவினர்.
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையாரடியில் நாகரால் நிறுவப்பட்ட குறுநில அரசானது கடல்வழி ஆற்றுவழி தரைவழி என்பவற்றோடு தொடர்வுடையதாகவும் காடுகளை எல்லையாகவும் சமவெளி நிலமாகவும் காணப்பட்டுள்ளது.
இங்கு மணி நாகன் என்று தமிழ் பிராமி வரி வடிவம் காணப்படுகின்றது. கிணறுகள் மூலமாக நீரினைப் பெற்று பயன்படுத்தும் முறையினையும் தோட்டப் பயிர்ச் செய்கையினையும் இங்கு குடியேறிய நாக வம்சத்தினர் உருவாக்கினர்.
இவ்விடம் நாகர்களின் வழிபாட்டு தலமாக காணப்பட்டதோடு கருங்கல் தூணினால் ஆலயத்தை அமைத்துள்ளனர். ஆனால் பிற்காலத்தில் ஆலயத்தில் உள்ள தூண்களை எடுத்து மக்கள் இளைப்பாறும் அம்பலம் ஒன்று ஆலயத்திற்கு அண்மையில் அமைத்துள்ளனர்.
ஆனால் அம்பலத்தின் எச்சம் மட்டும் தற்போது காணப்படுகிறது,” என்று குறிப்பிட்டார்.
தமிழ் பிராமி எழுத்துருக்கள் கி மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டுவரையில் புழகியதால், இந்தக் கிணறும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தது என்று தாம் கருதுவதாகவும் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.