கடந்த சில தினங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 35 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாக இடர் நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராய தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையின் காரணமாக நேற்று மாலை வரையில் நாடு முழுவதும் பல்லாயிர கணக்கான மக்கள் பாதிக்கட்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான நிவாரணப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
2020 உலகின் திருமணமான அழகியாக சிறிலங்கா பெண் தெரிவு!
2020 ஆம் ஆண்டின் “மிஸிஸ் வேர்ல்ட்” – “உலக அழகுத் திருமதி” என்ற பட்டத்தை சுவீகரித்தார் சிறிலங்காவைச் சேர்ந்த கரோலின் ஜூரி. அமெரிக்காவில் லொஸ்வேகொஸில் இடம்பெற்ற தெரிவில் 51 பேர் கலந்து கொண்டனர் . இதில் பங்குபற்றிய கேரோலின் குறித்த விருதை பெற்றுள்ளார். ஏற்கெனவே அவர் “ மிஸிஸ் ஸ்ரீ லங்கா” என்ற விருதுக்கும் சொந்தக்கார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போதே அவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார். 35 ஆண்டுகளுக்கு பிறகு “மிஸிஸ் வேர்ல்ட்” – “உலக அழகுத் ...
Read More »2 ஆவது நாளாகவும் சட்சியமளிக்க முன்னிலையானார் பேராயர் !
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினமும் 2 ஆவது நாளாக சாட்சியமளிக்க முன்னிலையாகியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த அவர் சுமார் நான்கு மணித்தியாலம் சாட்சியமளித்திருந்தார். நேற்றைய தினம் அவர் சாட்சியமளித்தபோது , இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ...
Read More »பிளாஸ்டிக் கழிவுகளால் மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழப்பு!
இரண்டு தொலைத்தூர தீவுகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் மாசுப்பாட்டில் சிக்கி மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய டாஸ்மோனியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களினால் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி இந்தியப் பெருங்கடலில் உள்ள கோகேஸ் தீவுகளில் சுமார் 508,000 ஹெர்மிட் நண்டுகளும், பசுபிக் பெருங்கடலில் ஹென்டர்சன் தீவில் சுமார் 61,000 ஹெர்மிட் நண்டுகளும் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகளில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதத்தில் கோகோஸ் தீவில் பிளாஸ்டிக் பொத்தல்கள், பாதணிகள் உள்ளிட்ட 414 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியருப்பதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை ...
Read More »இரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறப்பு!
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஆறு இஞ்சி அளவில் இன்று காலை எட்டு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாகக் குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 31 அடியாக உள்ள நிலையில் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளமான 36 அடி வரை நீரைச் சேமிக்கக் கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்துகொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. ...
Read More »லேக் ஹவுஸ் நிறுவனத்துக்கு புதிய தலைவர்!
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக டாக்டர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இவருக்கான நியமனக் கடிதத்தினை வழங்கி வைத்தார். டாக்டர் சரித ஹேரத் மூத்த பல்கலைக்கழக விரிவுரையாளரும், பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பிரதித் தலைவரும், முன்னாள் சுற்றுச்சூழல் துறைத் தலைவரும், ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஆவார்.
Read More »ஈரானில் கடந்த வாரம் 2 இலட்சம் மக்கள் போராட்டம்!
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கடந்த வாரம் ஈரானில் 200,000 மக்கள் போராட்டம் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டுள்ளதாக முன்னணி சர்வதேச இணையத்தளமான ‘த கார்டியன்’ செய்தித் தளம் தெரிவித்துள்ளது. ஈரான் அரசாங்கம் எரிபொருள் விலையை மூன்று மடங்காக உயர்த்துவதாக அறிவிப்பு செய்துள்ளது. இதனால் இஸ்லாமிய குடியரசின் கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வன்னம் கலவரங்களும், போராட்டங்களும் ஈரானில் இடம்பெற்று வருகின்றன. ஈரானிய அதிகாரிகள் இந்த வாரம் 200,000 மக்கள் போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டதாக மதிப்பிட்டுள்ளதுடன், 7,000 க்கும் மேற்பட்ட கைது சம்பவங்களும் ...
Read More »இரு அரசுகள் குறித்த பிரித்தானிய கட்சியின் கருத்து! -சிறிலங்கா அரசாங்கம்
இலங்கையில் இரு தேசம் ஒரு நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் கருத்து தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அதன் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தலை கொண்ட அவர்களின் காய்நகர்த்தல்களின் இலங்கை தலையிட தயாரில்லை எனவும் வெளிவிவகார செயலாளர் அறிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க இது குறித்து தெளிவுபடுத்துகையில் இலங்கையில் இரண்டு இராச்சியம் என்ற கருத்துக்கள் இங்கிலாந்து கட்சிகள் முன்வைக்கும் காரணியில் நாம் அறிந்த ...
Read More »கோத்தாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தற்காலிகமாக வாபஸ்!
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த 11 பேர் தங்கள் வழக்குகளை தற்காலிகமாக விலக்கிக்கொண்டுள்ளனர். ஜனாதிபதி என்ற அடிப்படையில்கோத்தாபய ராஜபக்ச தனக்குள்ள விடுபாட்டுரிமையை வலியுறுத்துவதை தடுப்பதற்காகவே இந்த தந்திரோபாய நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். கோத்தாபய ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவரிற்கு எதிராக மீள வழக்கு தாக்கல் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களிற்கு உள்ள உரிமையை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ...
Read More »ஆஸி.யை அதன் சொந்த மண்ணில் இந்தியா மட்டுமே வீழ்த்த முடியும்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சமீபத்தில் பாகிஸ்தான் அங்கு 0-2 என்று ஒயிட்வாஷ் டெஸ்ட் தோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான மைக்கேல் வான் இந்தியா மட்டுமே ஆஸி.யை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் என்று தெரிவித்துள்ளார். அதுவும் குறிப்பாக விராட் கோலி தலைமை இந்திய அணிக்கே இத்தகைய திறமைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தானை அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இன்னின்ங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்ட் போட்டியில் தங்கள் வெற்றி வாகையை 6-0 என்று உயர்த்தியுள்ளனர். ...
Read More »