ஈரானில் கடந்த வாரம் 2 இலட்சம் மக்கள் போராட்டம்!

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கடந்த வாரம் ஈரானில் 200,000 மக்கள் போராட்டம் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டுள்ளதாக முன்னணி சர்வதேச இணையத்தளமான ‘த கார்டியன்’ செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

ஈரான் அரசாங்கம் எரிபொருள் விலையை மூன்று மடங்காக உயர்த்துவதாக அறிவிப்பு செய்துள்ளது. இதனால் இஸ்லாமிய குடியரசின் கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வன்னம் கலவரங்களும், போராட்டங்களும் ஈரானில் இடம்பெற்று வருகின்றன.

ஈரானிய அதிகாரிகள் இந்த வாரம் 200,000 மக்கள் போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டதாக மதிப்பிட்டுள்ளதுடன், 7,000 க்கும் மேற்பட்ட கைது சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் ‘த கார்டியன்’ செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்கள் காரணமாக இதுவரை 208 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.