கொரோனா வைரஸ் மருந்துகளை வழங்கும் நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளிற்கு முன்னுரிமை வழங்கக்கூடாது என அரசாங்க மருத்துவ ஆய்வுகூட தொழில்சார் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் ஆசிரியர்கள் உட்பட பல தரப்பினர் பொதுமக்களுடன் நேரடிதொடர்பில் உள்ளவர்கள் அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார். உலகசுகாதார ஸ்தாபனம் முன்னுரிமை பட்டியல் ஒன்றை வழங்கியுள்ளது அதற்கு ஏற்பவே தடுப்பூசியை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பட்டியலில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முன்னுரிமை அளிக்கவேண்டியவர்கள் என அரசியல்வாதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது என ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய 6 லட்சம் பேர்!
கடந்த 2020ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவை விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சமாகப் பதிவாகியுள்ளது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 41 ஆயிரமாக உள்ளது. கடந்த டிசம்பர் 2020 காலக்கட்டத்தை கொரோனாவுக்கு முன்னரான டிசம்பர் 2019யுடன் ஒப்பிட்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று சூழலும் அதன் பின்னரான ஆஸ்திரேலிய நடைமுறையும் ஏற்படுத்திய இவ்வீழ்ச்சி ஆஸ்திரேலிய வரலாற்றில் இதற்கு முன் காணப்படாத ஒரு நிலை எனக் கூறப்படுகின்றது. சுற்றுலா சென்றவர்கள், Working Holiday Makers விசாவில் சென்றவர்கள், வெளிநாட்டு மாணவர்கள், வேலை ...
Read More »அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை வர்த்தகத்துக்கு பயன்படுத்தக்கூடாது- வெள்ளை மாளிகை எச்சரிக்கை
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் பெயரை அவரது உறவினர் ஒருவர் தனது வர்த்தக நிறுவனத்துக்கு பயன்படுத்தினார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ். வெற்றி பெற்றார். இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த மாதம் 20-ந் தேதி துணை அதிபராக பதவியேற்று கொண்டார். அவர் தனது துணை அதிபருக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கமலா ஹாரிசின் பெயரை அவரது உறவினர் ஒருவர் தனது வர்த்தக நிறுவனத்துக்கு பயன்படுத்தினார். ...
Read More »மேர்வின் சில்வா வட, கிழக்கிற்கு வரும்போது பாதுகாப்பின்றி வருவதைத் தவிர்கவேண்டும் எச்சரிக்கின்றார் – ரவிகரன்
மேர்வின் சில்வா வட, கிழக்கிற்கு வரும்போது பாதுகாப்பின்றி வருவதைத் தவிர்கவேண்டும் என ரவிகரன் தெரிவித்துள்ளார். ”மேர்வின் சிலவா வட கிழக்குத் தமிழ் மக்களைப் பற்றியோ, இளைஞர்களைப்பற்றியோ பூரணமாக புரிந்துகொள்ளவில்லை என நினைக்கின்றேன். அதேவேளை அவர் வட, கிழக்கிற்கு பாதுகாப்பின்றி வருவதனைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.” என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். ”காவல்துறை சீருடையில் தான் இருந்திருந்தால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களின் கால்களை முறித்திருப்பேன்” என மேர்வின் சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார். மேர்வின்சில்வாவின் இக் கருத்திற்குப் பதிலளிக்கும் வகையில் ...
Read More »தமிழர்களுக்கு எதிரான குற்றவாளிகளை தயக்கமின்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்- நவநீதம் பிள்ளை
மனித உரிமை பேரவை உறுதியான விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, தமிழர்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல் குற்றவாளிகளை எந்த வித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Read More »ஆஸ்திரேலிய விசா வாங்கித்தருவதாகக் கூறி ஏமாற்றிய சீனப்பெண்
ஆஸ்திரேலியாவில் போலி புலம்பெயர்வு முகவராக அறியப்பட்ட 38 வயது சீன பெண்ணுக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வு தொடர்பான பல்வேறு மோசடியில் ஈடுபட்ட இப்பெண், பல்வேறு நபர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் டாலர்கள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் பதிவுச் செய்யப்பட்ட புலம்பெயர்வு முகவரைப் போன்ற வெளியில் காட்டிக்கொண்ட இப்பெண், விண்ணப்பிக்கப்படாத விசா விண்ணப்பங்களுக்கு பலரிடம் கட்டணம் பெற்றிருக்கின்றார். இப்பெண் மோசடியான செயல்பாட்டினால் பலர் ஆஸ்திரேலியாவுக்குள்ளேயே நுழைய முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இவரால் ஏமாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் குறைவான ஆங்கிலத் திறன் மற்றும் ஆஸ்திரேலிய புலம்பெயர்வு ...
Read More »இங்கிலாந்து இளவரசர் ஹாரி 2வது குழந்தைக்கு தந்தையாகிறார்
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2வது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். இங்கிலாந்து மகாராணி 2-வது எலிசபெத்தின் 2-வது பேரன் ஹாரி, தொலைக்காட்சி நடிகையான மேகன் மெர்கலை காதலித்து திருமணம் செய்தார். ஹாரி கடந்த வருடம் மார்ச் மாதம் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து தனது மனைவியுடன் இங்கிலாந்து அரண்மனையை விட்டு வெளியேறினார். தற்போது இவர் தனது மனைவி மேகன் மெர்கலுடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். ஹாரிக்கும் அவரது சகோதரர் ...
Read More »ரவிகரனை விசாரணைக்காக அழைத்துள்ள காவல் துறை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக முல்லைத்தீவு ;காவல் துறை ;முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு அழைத்துள்ளனர். குறிப்பாக ;நேற்று (14.02.2021) ;அழைப்பாணையுடன் ரவிகரனின் வீட்டிற்கு முல்லைத்தீவு ; காவல் துறையினர் சென்றிருந்தனர் காவல் துறையிடம் சென்றபோது ரவிகரன் வீட்டில் இருந்திருக்கவில்லை. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணை ஒன்றினை மேற்கொள்வதற்காக ;காவல் துறை ;நிலையம் வருமாறு முல்லைத்தீவு காவல் துறை ;ரவிகரனை அழைத்திருந்தனர். அந்தவகையில் காவல் துறையின் அழைப்பினை ஏற்று ரவிகரன் முல்லைத்தீவு ;காவல் ...
Read More »கஜன்களுடன் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சந்திப்பு!
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவகாரங்கள், மாகாண சபை முறைமை மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய நாட்களில் சிறுபான்மை ...
Read More »ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ரபெல் நடால், மெத்வதேவ் 4வது சுற்றுக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், மெத்வதேவ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 69-ம் நிலை வீரரான கேமரூன் நோர்ரியை (இங்கிலாந்து) எதிர்கொண்டார். விறுவிறுப்பானக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 7-5, 6-2, ...
Read More »