வவுனியா குஞ்சுக்குளம் மற்றும் வேலங்குளம் பகுதிகளில் இருந்து வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் செல்களை விசேட அதிரடிப் படையினர் நேற்றையதினம் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குஞ்சுக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளப்பகுதி மற்றும் வேலங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் வழங்கியிருந்தனர். குறித்த பகுதிக்கு விஜயம் செய்தகாவல் துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் 7 மோட்டார் செல்கள் மற்றும் ஒரு கைக்குண்டையும் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆக்கிரமிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்கிளாய் கிழக்கு, கொக்களிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது. இந்த ஆக்கிரமிப்புத் தொடர்பில் அரசுடன் பேசி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாடு தொடர்பாக 03.05.2021அன்று அப்பகுதி மக்களால் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ...
Read More »இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.37 லட்சம் கொரோனா நிதி உதவி
கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறி வருகிறது. கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்த வண்ணமாய் உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறுகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு கொரோனா உதவிகளை அளித்து வருகிறது. இந்தநிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், அந்த நாட்டு யுனிசெப் அமைப்பும் இணைந்து இந்தியாவுக்கு ...
Read More »சீனாவிலிருந்து குயின்ஸ்லாந்து வந்த கப்பலில் இருந்த 12 பேர் புகலிடக் கோரிக்கை!
சீனாவிலிருந்து குயின்ஸ்லாந்து துறைமுகத்தை வந்தடைந்த கால்நடைகளை ஏற்றிச் செல்லும் கப்பலில் இருந்து குதித்து Townsville பிரதேசத்துக்குள் தப்பிச்சென்றதாக கூறப்படும் கப்பல் பணியாளர் ஒருவர், பொலீஸாரிடம் சரணடைந்து தனக்கு ஆஸ்திரேலிய அரசு தஞ்சமளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவருடன் கப்பலில் வந்த இன்னும் பதினொரு பேரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பதினொரு பேரும் குறிப்பிட்ட கப்பலில் பணிபுரிந்த சிரிய நாட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை குயின்ஸ்லாந்து Townsville துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் துறைமுகத்திலிருந்து ஏப்ரல் ...
Read More »பயணத்தடை: இந்தியாவுக்கு எதிரான இனவாத அறிவிப்பா?
நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை மீறி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருப்பது இனவாதம் சார்ந்தது அல்ல என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸன் கூறியுள்ளர். அரசாங்கத்தின் அறிவிப்பு இந்தியர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார். இந்தியாவில் கோவிட் பரவல் கொடூரமான அளவில் செறிவடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் மீண்டும் தாயகத்துக்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி – பயண ஓட்டைகளை பயன்படுத்தி – யாராவது ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தால், அவர்களுக்கு 60 ஆயிரம் டொலர்கள் வரையிலான ...
Read More »ஈரானுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உறுதியாகவில்லை- அமெரிக்கா மறுப்பு
ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் இரு நாடுகளிடையே பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கு இருக்கிறது. ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 4 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அதேபோல் ஈரான் நாட்டை சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான ...
Read More »இந்தியாவைப் போன்று இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது
இந்தியாவைப் போன்று இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா தொற்று நிலைமையானது அதிகரிக்கக் கூடும். இதனைக் கருத்திற்கொண்டு நளாந்த நடைமுறை வாழ்க்கை முறையில் சுகாதார வழிகாட்டுதல்களைச் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். இதனைத் தவறும் பட்சத்தில் அண்டை நாடான இந்தியாவைப் போன்ற ஒரு சூழ்நிலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடலாம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர் ஒருவர் வீட்டில் அடையாளம் ...
Read More »வடக்கில் மேலும் 7 பேருக்கு கொரோனா
வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 478 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர். இதேவேளை, வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ...
Read More »புத்தர் சிலை உடைப்பு – கைது
புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவரை காங்கேசன்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்துக்கு அண்மையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் மதுபோதையில் புத்தர் சிலையை உடைத்ததாக காவல் துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் காங்கேசன்துறை காவல் துறையின் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
Read More »இந்தியாவிலிருந்து வரும் ஆஸ்திரேலிய மக்களுக்கு 5 ஆண்டு சிறை, அபராதம்: ஆஸி. பிரதமர் மோரிஸன் அதிரடி
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ஆஸ்திரேலிய மக்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும், கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இங்கிருந்து வரும் ஆஸ்திரேலிய மக்களால் கரோனா வைரஸ் பரவிவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ளது. இருப்பினும், வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தும் அளவு ...
Read More »