புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவரை காங்கேசன்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்துக்கு அண்மையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மதுபோதையில் புத்தர் சிலையை உடைத்ததாக காவல் துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் காங்கேசன்துறை காவல் துறையின் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal