தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான இரா.சயனொளிபவன், அவரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருணா குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இரா.சயனொளி பவன் மற்றும் அவரது சகோதரர் மரண வீடு ஒன்றுக்கு சென்று திரும்பியபோதே அவர்களை வழிமறித்த கும்பல் தாக்குதலைநடத்தியது. இதில் வேட்பாளரின் சகோதரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்திய சிலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேறு சிலர் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம்- முன்னணி வேட்பாளர் வி.மணிவண்ணன்
வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் வி.மணிவண்ணண் தெரிவித்தார். நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் இவர் நல்லூரில் ஆலய தரிசனத்திலும், தியாகி திலீபனின் நினைவிடத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டு தனது வாக்கினை கொக்குவில் மேற்கு சி.சி.ரி.எம் பாடசாலை நிலையத்தில் பதிவு செய்து வந்த நிலையில் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாம் எம்முடைய ஜனநாயக கடமையினை நிறைவு செய்துள்ளோம். வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்துள்ளோம் என்றார். யாழ். சென் ஜேம்ஸ் பாடசாலையில் தமிழ்த்தேசிய மக்கள் ...
Read More »லெபனான் சம்பவத்தில் இரு இலங்கையர் காயமடைந்துள்ளனர்
லெபனானின் தலைநகரத்தில் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் நேற்று (4) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர்கள் இருவர் காயமடைந்துள்ளனரென, லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கைத் தூதரகமும் சிறிதளவு சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
Read More »யாழ். தேர்தல் மாவட்டத்தில் கள்ளவாக்கு பதிவு
யாழ். தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் ஏற்கனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் சம்பவம் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய ...
Read More »ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் உள்ள அகதிகளின் நிலை என்ன?
பப்பு நியூ கினியா எனும் தீவு நாட்டில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளின் பாதுகாப்பை ஆஸ்திரேலிய அரசு உறுதிச் செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் சட்ட மையம் வலியுறுத்தியுள்ளது. பப்பு நியூ கினியாவில் கொரோனா தொற்று பரவினால் அது அந்நாட்டில் உள்ள சுகாதார கட்டமைப்பை சீர்குலைக்கூடும் என பப்பு நியூ கினியாவின் பெருந்தொற்று கட்டுப்பாட்டாளர் எச்சரித்துள்ள நிலையில் அங்குள்ள அகதிகளின் நிலைக்குறித்து அச்சம் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், பப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலிய ...
Read More »தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் எனும் மணியின் கருத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு!
தேர்தலில் தோற்றால் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்த கருத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மணியுடன் ;பேசுங்கள் எனும் நிகழ்ச்சி நேற்றைய தினம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி. மணிவண்ணன் கருத்து தெரிவிக்கும் போது, கடந்த 10 வருடங்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டு வருகிறேன். தமிழ் மக்களின் உரிமைக்காகவும் மண் மீட்புக்காகவும் என்னால் முடிந்த காத்திரமான பங்களிப்பை ...
Read More »விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டாக் செயலிக்கு தடை
டிக்டாக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர். இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள ...
Read More »பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள்!
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார். வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் அண்டாத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என பொதுமக்களுக்குத் தான் உறுதியளிப்பதாகத் தெரிவித்த அவர், காலநிலை நன்றாக இருந்தால் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவித்தார். வாக்காளர்கள் கொரோனா வைரஸ் குறித்து அச்சமடையாமல் தமது வாக்குரிமையைப் பய்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கின்றார். இதற்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் ...
Read More »நஞ்சு மாலைகளை அணிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்ற பின்னரே மாலை !
நச்சு மாலைகளை கழுத்தில் அணிந்து போராடி மடிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்று எம்மினத்திற்கு விடிவு கிடைத்த பின்னரே மேடைகளில் மாலை அணிவோம் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் நேற்றைய தினம் நடைபெற்ற பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்ற முற்பட்ட போது, நிகழ்வினை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவர் மலர் மாலை அணிவிக்க முற்பட்ட போது கழுத்தில் மாலை போட வேண்டாம் என் கைகளில் தாருங்கள் என வாங்கினார். அதன் பின்னர் தான் மாலை அணிந்து கொள்ளாமை பற்றி யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என ...
Read More »வாக்களிப்பதற்கு விடுமுறையளிக்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
வாக்காளர்கள் ; வாக்களிப்பதற்காக சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விடுமுறை ; வழங்காத ; நிறுவனம் மற்றும் வர்த்தக நிலையங்களின் அதிகாரிகளுக்கு எதிராக ; கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். “பொதுத்தேர்தல் குறித்து மஹிந்த தேசப்பிரியவின் அறிவிப்பு | இதுவரையில் விடுமுறை கிடைக்கப் பெறாத ஊழியர்கள் தேர்தல் ஆணைக்குழுவிலோ அல்லது தொழிற் துறை ஆணைக்குழுவிலே விரைவாக முறைப்பாடு செய்யுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ...
Read More »