வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் வி.மணிவண்ணண் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் இவர் நல்லூரில் ஆலய தரிசனத்திலும், தியாகி திலீபனின் நினைவிடத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டு தனது வாக்கினை கொக்குவில் மேற்கு சி.சி.ரி.எம் பாடசாலை நிலையத்தில் பதிவு செய்து வந்த நிலையில் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாம் எம்முடைய ஜனநாயக கடமையினை நிறைவு செய்துள்ளோம். வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்துள்ளோம் என்றார்.
யாழ். சென் ஜேம்ஸ் பாடசாலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவரும் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும். வேட்பாளர் திருமதி வாசுகி சுதாகர் யாழ்.திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலயத்திலும், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கரவெட்டியிலும், திருமதி அ.ஞானகுணேஸ்வரி வளாலாயிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal
