தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான இரா.சயனொளிபவன், அவரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருணா குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இரா.சயனொளி பவன் மற்றும் அவரது சகோதரர் மரண வீடு ஒன்றுக்கு சென்று திரும்பியபோதே அவர்களை வழிமறித்த கும்பல் தாக்குதலைநடத்தியது.
இதில் வேட்பாளரின் சகோதரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்திய சிலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேறு சிலர் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
Eelamurasu Australia Online News Portal