பல்வேறு மின்சார உற்பத்தி நிலையங்களில் திடீரென ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு மற்றும் வெப்பமான வானிலை காரணமாக மின்சார விநியோகத் தடை ஏற்படுத்த நேரிடும் என மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், குறித்த நிலையானது எதிர்வரும் சில நாட்களுக்குள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மின்சார உறபத்தி நிலையங்களின் செயழிலப்பு மற்றும் வெப்பமான வானிலை என்பனவற்றின் காரணமாக, மின்சார விநியோகத்திற்கு கேள்வி 15 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குறித்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு இன்னும் 10 நாட்கள் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
யுத்தத்தின் போது அக்கறை காட்டாத மனித உரிமை அமைப்புக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தலையீடு செய்வது ஏன்?
நாட்டில் மூன்று தசாப்தகாலமாக யுத்தம் நிலவிய போது எவ்வித அக்கறையும் காட்டாத மனித உரிமை அமைப்புக்கள் தற்போது யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவ் மக்கள் சுமுகமானதொரு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்ற போது தேவையின்றி ஏன் தலையீடு செய்கின்றன,இது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு என்றே கருதவேண்டியுள்ளது. எனவே அரசாங்கத்திற்கு முதுகெலும்பு உண்டெனின் ஸ்திரமான தீர்மானமொன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள்சபை மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். ...
Read More »திருகோணமலையில் உயிரிழந்த அவுஸ்திரேலியர்!
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புராமலை தீவு பகுதியில் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த வயோதிபரொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா – சிட்னி நகரைச் சேர்ந்த ஜோன் ஹோல்டர் (70 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த அவுஸ்திரேலியர் குச்சவெளி பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்தவேளை புராமலை தீவு பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளதாகவும் அதே நேரத்தில் நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி ...
Read More »நியூசிலாந்து தாக்குதலில் உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர் திருமணம்!
நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது, உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்களுள் ஒருவருக்கு கடந்த வியாழன் அன்று திருமணம் நடந்தது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15-ம் தேதி தொழுகை நடைபெற்றபோது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்தபோது, அந்த மசூதிக்கு வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் சென்றனர். உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், கிரிக்கெட் வீரர்களை அதிகாரிகள் அவசரமாக வெளியே அழைத்து வந்தனர். வேகவேகமாக அருகில் இருந்த ...
Read More »கார்பன் பரிசோதனை அறிக்கையை விட மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும்!-சாலிய பீரிஸ்
மன்னார் மனித புதை குழி தொடர்பாக தற்போதைய கார்பன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்துக்கொண்டு கால வரையரையினை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லை.மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். மன்னார் மனித புதை குழி தொடர்பாகவும்,கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பாகவும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளை இன்று வெள்ளிக்கிழமை (22) மாலை 2 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சந்தித்த பின் ...
Read More »அவுஸ்திரேலியாவில் கரையொதுங்கிய அபூர்வ விலங்கினம்!
பெருங்கடல் சூரியமீன் ஒன்று தென் அவுஸ்திரேலியக் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. அந்த மீனின் படங்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. கரையொதுங்கிய மீன் முதலில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது ocean sunfish வகையைச் சேர்ந்தது என்று நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 1.8 மீட்டர் நீளமுள்ள அந்த மீன், அடிலேய்ட் நகருக்கு 80 கிலோமீட்டர் தெற்கே உள்ள கூரொங் (Coorong) தேசியப் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் மீனை மிதக்கும் மரத்துண்டு என்று நினைத்ததாகக் கூறினார் அதனைக் கண்டுபிடித்தவரின் துணைவி லினெட் கிரஸிலாக். தமது துணைவர் ஸ்டீவன் ...
Read More »கூட்டமைப்பு தலைமைகள் இரட்டை வேடம்! -சிவசக்தி ஆனந்தன்
தமிழ் மக்களால் அண்மைய நாட்களில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் தமிழரசு கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கின்றமை அவர்களின் இரட்டை முகத்தையே வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்றையதினம் அவரது அலுவலகத்தில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உரிமை பேரவையில் 30:1 தீர்மானம் முன்வைக்கபட்ட போது அது சர்வதேச விசாரணையா? உள்நாட்டு விசாரணையா? என்று சொற்களில் தொங்கி கொண்டிருக்காமல் அதன் உள்ளடக்கத்தையே பார்க்க வேண்டும் என்று சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார். தற்போது புதுக்கதை ஒன்றை ...
Read More »குழந்தை நட்சத்திரங்கள் சித்ரவதை- வளர்ப்பு தாய் கைது!
அமெரிக்காவில் யூடியூப் சேனலில் சரியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தத்தெடுத்த குழந்தைகளை சித்ரவதை செய்த வளர்ப்பு தாய் கைது செய்யப்பட்டுள்ளார். உலகளவில் தற்போது இருக்கும் இணையதள வசதிகள் கொண்டு, யார் வேண்டுமென்றாலும் பிரபலம் ஆகலாம் என்றாகிவிட்டது. யூடியூப் எனும் இணையதளம் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன் மூலம் பல முறைகளில் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பிரபலங்களாக மாற்றி வருகின்றனர். அவ்வகையில் உருவாக்கப்பட்டது தான் ‘ஃபெண்டாஸ்டிக் அட்வெஞ்சர்ஸ்’ எனும் யூடியூப் சேனல். இதனை மச்செல் ஹாக்னி(48) எனும் பெண் உருவாக்கியுள்ளார். ...
Read More »நாாளுமன்ற தேர்தலில் 25 வீதம் பெண்களுக்கு வழங்க வேண்டும்!
எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் 25 வீதம் பெண்களுக்கு வழங்குவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வுகள் நேற்று இரம்பொடை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர் இராதாகிருஸ்ணன், இந்த அரசாங்கம் பெண்கள் ...
Read More »நியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை! -பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்
நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், ...
Read More »