அவுஸ்திரேலியாவில் கரையொதுங்கிய அபூர்வ விலங்கினம்!

பெருங்கடல் சூரியமீன் ஒன்று தென் அவுஸ்திரேலியக் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.  அந்த மீனின் படங்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

கரையொதுங்கிய மீன் முதலில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது ocean sunfish வகையைச் சேர்ந்தது என்று நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

1.8 மீட்டர் நீளமுள்ள அந்த மீன், அடிலேய்ட் நகருக்கு 80 கிலோமீட்டர் தெற்கே உள்ள கூரொங் (Coorong) தேசியப் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முதலில் மீனை மிதக்கும் மரத்துண்டு என்று நினைத்ததாகக் கூறினார் அதனைக் கண்டுபிடித்தவரின் துணைவி லினெட் கிரஸிலாக்.

தமது துணைவர் ஸ்டீவன் ஜோன்ஸ் பல ஆண்டுகள் மீனவராக இருப்பதால் மீனை உடனடியாக அடையாளம் கண்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன் சூரியமீனை அவர் நேரடியாகப் பார்த்ததில்லை என்றும் கிரஸிலக் தெரிவித்துள்ளார்.