Tag Archives: ஆசிரியர்தெரிவு

வடமகாணத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவக்கூடிய நிலை

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் முதலாம் படி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.யமுனானந்தா எச்சரிக்கை செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வடமகாணத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவக்கூடிய ஏது நிலை உள்ளது. மக்கள் இது தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும். சமூக இடைவெளியினை பேணாதா காரணத்தால் இதன் தாக்கம் ஏற்படக்கூடிய நிலை உருவகலாம். இதனால் பொதுமக்கள் ஒன்று கூடுதல், தேவையற்ற பிரயாணங்களை தவிர்க்க வேண்டும். இதனை ...

Read More »

சிறிலங்கா படையினரும் புலனாய்வாளர்களும் வடக்கில் திட்டமிட்டு முட்டுக்கட்டை

பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்க ஆரம்பித்துள்ள நிலையில் வடக்குமாகாணம் முழுவதும் படையினரும், புலனாய்வாளர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளினதும், வேட்பாளர்களினதும் தேர்தல் செயற்பாடுகளுக்கு திட்டமிட்ட வகையில் முட்டுக்கட்டடைகளை ஏற்படுத்தி வருவதாக தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர் அத்துடன் ஆளும் தரப்பு ஆதரவாக படையினரும், புலனாய்வுப்பிரிவினரும் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் அதேநேரம், தங்களது மக்கள் பிரசாரத்தினை தடுக்கும் வகையில் அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் தாம் பிரசார நடவடிக்கைகளுக்கு செல்கின்றபோது பின்தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, தமிழ் மக்கள் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்ப துடிக்கும் நியூசிலாந்துவாசிகள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் அமைந்திருக்கும் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ள நியூசிலாந்துவாசிகள் நியூசிலாந்து திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பில் உள்ள 30க்கும் மேற்பட்ட நியூசிலாந்துவாசிகளில் ஒருவரான Raymond Elise, ஜூன் 18ம் திகதியோ அல்லது அதை ஒட்டிய நாளிலோ நாடுகடத்தப்படுவோம் எனக் கூறப்பட்டதாகவும் ஆனால் கொரோனா சூழல் நாடுகடத்தலை தாமதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதனால் தாங்கள் எப்போது நியூசிலாந்துக்கு அனுப்பப்படுவோம் என்று அறிய முடியாத நிலையில் இவர்கள் தடுப்பு முகாமில் இருக்கின்றனர். நியூசிலாந்து அரசு இந்த ...

Read More »

அந்த படகு வீட்டில் ஒவ்வொரு இரவும் நரகமாகவே இருந்தது: சித்திரவதைக்கு உள்ளான அவுஸ்திரேலிய இளம்பெண்!

அவுஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியரான கார்மென் கிரீன்ரீ என்பவர் தமது 22 ஆம் வயதில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார். தற்போது 37 வயதாகும் கார்மென் கிரீன்ரீ கடந்த 2004 ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட அந்த கொடூர சம்பவத்தை தற்போது ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார். கார்மென் தமது இளைமை காலத்தில் கடல் அலை மீது சாகசம் செய்யும் ஒரு வீராங்கனையாக ...

Read More »

சீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 140 பேர் பலி

சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி 140 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஹூபேய் மாகாணம் உள்பட சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அன்ஹுய், ஜிஅங்ஜூ, ஹுஜுயங் உள்ளிட்ட மாகாணங்களிலும் கனமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளநீரில் சூழ்ந்துள்ளன. சாலைபோக்குவரத்து, ...

Read More »

நல்லூர் உற்சவம் 25 ஆம் திகதி ஆரம்பமாகின்றது!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தலால் கோயிலின் உள்ளே 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் காவடி, தூக்குக் காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும், தண்ணீர் பந்தல், அன்னதான சேவைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவது கடினம் என்பதனாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது .

Read More »

ஊடகவியலாளர் அகில அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கொழும்பில் புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னாள் ஊடகவியலாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கொழும்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(10) ஒரு வழக்கு தொடர்பிலான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தனவை போதைவஸ்து தடுப்பு பிரிவு காவல் துறை  பரிசோதகர் நியுமால் ரங்க ஜீவவினால் அச்சுறுத்தப்பட்டிருந்தார். இதனை கண்டித்து இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். இதன்போது ஊடக ...

Read More »

பிரபல சர்வதேச நிறுவனங்களை ஆளும் 58 இந்திய நிர்வாகிகள்

அமெரிக்கா, கனடா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் 11 நாடுகளில் பல முன்னணி நிறுவனங்கள் 58 இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பல திறமை வாய்ந்த நபர் களில் 58 பேர் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளில் பல முக்கிய நிறுவனங்களில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளனர். இந்நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடி டாலர் அளவில் உள்ளது. இந்நிறுவனங்களின் வருவாய் ஒரு லட் சம் கோடி டாலர். இவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 36 லட்சம். ...

Read More »

வடபகுதியில் இராணுவத்தினரை நிலைகொள்ளச்செய்யும் நடவடிக்கைகள் அதிகரிப்பு

தேர்தலுக்கு முன்னதாக வடபகுதியில் அதிகரித்த இராணுவபிரசன்னம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார். வடபகுதியில் படையினரை நிலைகொள்ளச்செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். சில வேட்பாளர்களின் வீடுகளுக்கு புலனாய்வு பிரிவினர் சென்று வேட்பாளர்கள் செல்லவுள்ள இடங்கள் அவர்களின் கூட்டங்கள் இடம்பெறவுள்ள இடங்கள் குறித்த விபரங்களை சேகரிக்கின்றனா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்திஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்கள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால் மாத்திரமே காவல்துறையினருக்கு தகவல் வழங்கவேண்டும் என்பது சட்டம் என சுட்டிக்காட்டியுள்ள ரட்ணஜீவன் ஹூல் ஆனால் ...

Read More »

முகக்கவசம் அணியாதவர்கள் இறுக்கமாக கண்காணிக்கப்படுவர்

வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நமது நாட்டில் கொரோனா நோய் தொடர்பான அபாயம் தொடர்ந்தும் இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்லும் பொழுது முகக் கவசம் அணிவதும், குறைந்தது இருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுவதும், சரியான ...

Read More »