நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அச்சுறுத்தலால் கோயிலின் உள்ளே 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் காவடி, தூக்குக் காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும், தண்ணீர் பந்தல், அன்னதான சேவைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவது கடினம் என்பதனாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது .
Eelamurasu Australia Online News Portal