சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி 140 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஹூபேய் மாகாணம் உள்பட சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
அன்ஹுய், ஜிஅங்ஜூ, ஹுஜுயங் உள்ளிட்ட மாகாணங்களிலும் கனமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளநீரில் சூழ்ந்துள்ளன. சாலைபோக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் தடைபட்டுள்ளன.
மேலும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் கனமழை காரணமாக ஏற்ற வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலர் நிலச்சரிவுகளில் சிக்கி மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal