Tag Archives: ஆசிரியர்தெரிவு

பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வராது!

குறைந்தபட்ச செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது என உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த ...

Read More »

19 ஆவது திருத்தத்தின் ஜனநாயக அம்சங்களை நீக்க அரசாங்கம் முயற்சி

19 ஆவது திருத்தத்தில் உள்ள ஜனநாயக அம்சங்கள் பலவற்றை இல்லாமலாக்குவதற்கான முயற்சி இடம்பெறுவதாகதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் இதேசமயம் தனிப்பட்ட நபரை நாட்டின் சர்வாதிகாரியாக்குவதற்கான முயற்சியாக 20 ஆவது திருத்தத்தை பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்கும் என குறிப்பிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன்,நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வௌியேயும் எதிர்ப்பை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை ...

Read More »

ரவிராஜ் படுகொலை தொடர்பில் கடற்படை புலனாய்வு அதிகாரி தெரிவித்தது என்ன?

முன்னாள் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்களும் போலியான ஆதாரங்களை உருவாக்குமாறு சிஐடியினருக்கு அழுத்தம் கொடுத்தனர் என ஓய்வுபெற்ற கடற்படை புலனாய்வு அதிகாரி காமினிசெனிவிரட்ண தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அரச அதிகாரிகள் அரசியல்பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சிஐடியை சேர்ந்த சிரேஸ் அதிகாரி அமரவன்ச என்பவர் ரவிராஜ் படுகொலை வழக்கில் அரச தரப்பு சாட்சியாக தன்னை ஆஜராகுமாறு அழுத்தம் கொடுத்தார் என ...

Read More »

கொக்குளாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகாரசபை தடையாக உள்ளது

கொக்குளாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகாரசபை தடையாக உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவடத்திலுள்ள கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய பகுதிகளில் 601 தமிழரகளுக்குச் சொந்தமான 2,524 ஏக்கர் பயிரச் செய்கை நிலங்களில் தமிழர்கள் மீளவும் குடியமரவும், விவசாயம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதனை அம்பலப்படுத்தியுள்ளார். ...

Read More »

ஜமால் கஷோகி கொலை வழக்கு: 5 பேரின் மரண தண்டனையை ரத்து

ஜமால் கஷோகி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, 20 ஆண்டுக்காலம் சிறை தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கட்டுரைகளை எழுதி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்துக்கு சென்ற ஜமால் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியா அரசு தான் இந்த ...

Read More »

20 ஆவது திருத்தத சட்டம் – பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தது என்ன?

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக்கொள்ள முடி யாத சில பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பெங்கமுவே நாலக தேரர் தெரிவித் துள்ளார். ஜனாதிபதியை நீதிமன்றத்தில் சந்தித்து கேள்வி கேட்க 20 ஆவது திருத்தச் சட்டம் தடுத்துள்ளது என்றும் அவ்வாறு செய்வது பொருத்தமானதல்ல என்றும், ஜனாதிபதி யாக இருந்தபோதிலும் அரசியலமைப்பிற்கு முரணாகச் செயற்பட்டால் அவருக்கு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.   இந்தச் சட்டத்தால் தணிக்கையாளர் ஜெனரலின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் சில அரசு நிறுவனங்களைத் ...

Read More »

20வது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பறிக்கும்

20வது திருத்தம் காரணமாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறையும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. உத்தேச 20வது திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு போதியளவு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என தேர்தல்வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகளவு அதிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என தேர்தல்வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளகஜநாயக்க தெரிவித்துள்ளார். 20வது திருத்தம் நகல்வடிவிலேயே உள்ளதால் மேலதிக பிரிவுகளை இணைக்கலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்தின் நகல்வடிவில் உள்ள விடயங்கள் தேர்தல்கள் ...

Read More »

சஜித்தின் இணைப்புச் செயலாளராக உமா நியமனம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ், இன்றைய தினம் (8)) நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

Read More »

20ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளும்

இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின் மீதும் நாடாளுமன்ற ஜனநாயக விழுமியங்களின்மீதும் அக்கறை உள்ள அனைவரும் கட்சி, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் நாடு படுபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ; க.பிறேமச்சந்திரன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் ...

Read More »

கொவிட்-19: தடுப்பு மருந்துகளைக் காட்சிப்படுத்தியது சீனா!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை பீஜிங்கில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியில் முதன் முறையாக கடந்த 6 ஆம் திகதி சீனா காட்சிப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சினோவக் பயோடெக் (Sinovac Biotech LTD) மற்றும் சினோபார்ம்(Sinopharm) ஆகிய இரு சீன நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள குறித்த மருந்துகளே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை சந்தையில் விற்பனைக்கு வராத நிலையில், 3 ஆம் கட்ட பரிசோதனைகள் முடிந்து நடப்பு ஆண்டின் இறுதிக்குள் குறித்த மருந்துகளின் விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்குமென உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமை ...

Read More »