சீனா தனக்கென தனியாக விண்வெளி நிலையம் அமைத்து வருகிறது. இதற்காக சீன வீரர்கள் விண்வெளியில் தங்கி பணிகளை செய்து வருகிறார்கள். அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் எலான்மஸ்க் தனது நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மூலம் ஏராளமாக செயற்கைகோள்களை விண்வெளியில் செலுத்தி உள்ளார். இணையதள சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக செலுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் புவிவட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. சீனா தனக்கென தனியாக விண்வெளி நிலையம் அமைத்து வருகிறது. இதற்காக சீன வீரர்கள் விண்வெளியில் தங்கி பணிகளை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் அமெரிக்க நிறுவனமான ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
’கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வு’
“தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு, சர்வதேச சமூகத்தால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென, பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் எம். பி. தெரிவித்தார். அத்துடன், தமிழ்க் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு எனவும், அவர் கூறினார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாக, நேற்று முன்தினம் (28), அவர் அனுப்பி வைத்த ...
Read More »பேராயர் டெஸ்மன்ட டுட்டு – அட்டூழியங்களுக்கு எதிரான உலகின் முகவரி
மனித உரிமைகளுக்காகவும் உலக சமாதானத்துக்காகவும் தனது தள்ளாத வயதிலும் போராடிவந்த பேராயர் டெஸ்மன்ட் டுட்டுவின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு ஆகும். தென்னாபிரிக்காவில் தனது கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான வெள்ளை நிறவெறிக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவந்த டெஸ்மன்ட் டுட்டு மனித உரிமைகளின் ஒரு சர்வதேச அடையாளமாக விளங்கிவந்துள்ளார். தென்னாபிரிக்காவைத் தாண்டியும் பூமிப்பந்தில் எங்கெல்லாம் மனிதம் வதைபடுகின்றதோ அங்கெல்லாங்கூட அட்டூழியங்களுக்கு எதிரான ஒரு உலகின் முகவரியாகத் திகழ்ந்தார் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தெரிவித்துள்ளது. பேராயர் டெஸ்மன்ட் டுட்டுவின் மறைவையொட்டி தமிழ்த்தேசியப் ...
Read More »நோபல் பரிசு பெற்ற தென்ஆப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்
நிறவெறி எதிர்ப்பின் அடையாளமான நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தில் கருப்பின மக்கள் மீதான அடுக்கு முறைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் போராட்டம் நடத்தியவர்களில் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு குறிப்பிடத்தக்க நபர் ஆவார். தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு நேற்று காலமானார். அவருக்கு வயது 90. நிறவெறி எதிர்ப்பின் அடையாளமான நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தில் கருப்பின மக்கள் மீதான அடுக்கு முறைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் போராட்டம் நடத்தியவர்களில் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு குறிப்பிடத்தக்க நபர் ஆவார். ...
Read More »பேராயர் டெஸ்மண்ட் டுட்டு நல்லிணக்கத்துக்கும் அயராது உழைத்தவர்!
பேராயர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களின் மறைவைக் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலை கொள்கிறது எனவும், அவர் தென்னாபிரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகவும் உலகில் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் போராடியவர் மட்டுமல்லாது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமாகவும் அயராது உழைத்தவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது. உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றிய அவர் நீதியும் கருணையும் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல: பிரிக்க முடியாத முழுமையின் இரு அங்கங்கள் என்பதைக் காண்பித்தார். இயேசுவின் பிறப்பை உலகம் நினைவு கூரும் இவ் வேளையில் நிகழ்ந்த இவரது ...
Read More »யாழிலிருந்து சிலைகளை கடத்தியவர்கள் விளக்கமறியலில்
வலிகாமம் வடக்கில் உள்ள கோவில் விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும், எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். வலிகாம் வடக்கு பிரதேசத்தில் உள்ள கோவில்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் விக்கிரகங்களைக் கடத்தி கொழும்பில் விற்பனை செய்த குற்றச்சாட்டில், கீரிமலை – நல்லிணக்கபுரம் மற்றும் புத்தூர் – நவக்கிரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர், கடந்த 24ஆம் திகதியன்று, காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடந்த 09ஆம் திகதி முதல் 23ஆம் ...
Read More »ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானுக்கு முதல் பலி
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,999 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 3 பேர் பலியாகி உள்ளனர். ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு சிட்னி முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த 80 வயதுள்ள முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் உறுதியானது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பலியானார். இது ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானக்கு ஏற்பட்ட முதல் ...
Read More »ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணிக்க தடை – தலிபான்கள் அதிரடி உத்தரவு
ஹைஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது பயணம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:- ஆப்கானிஸ்தானில் 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது. பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக ஹைஜாப் அணிய வேண்டும். ...
Read More »ஆட்கடத்தலுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் தலைமையின் கீழ்….
எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் ஆட்கடத்தல் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு மேலும் பல செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணி அறிவித்துள்ளது. ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு சேவைகளுடன் ஒருங்கிணைந்த உயர் ரக நிறுவன பொறிமுறையை நிறுவும் நோக்கில், அமைச்சரவையினால் இவ்வாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் தலைமைத்துவனது, நீதி அமைச்சிலிருந்து பாதுகாப்பு அமைச்சிற்கு மாற்றப்பட்டது. ;இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்ட சுற்றறிக்கையின் ஊடாக, குற்றப் ...
Read More »“ஒரே நாடு, ஒரே சட்டம்” -கருத்துக்களை கேட்டறிந்தது
“ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தது. நேற்று (25) முற்பகல் மாத்தளை மாவட்டச் செயலகத்துக்கும் பிற்பகல் கண்டி மாவட்டச் செயலகத்துக்கும் வருகை தந்த மாகாண மதத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள், செயலணியிடம் கருத்துக்களைத் தெரிவித்தனர். வருகை தந்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்த குழுவின் தலைவர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர், இந்த விடயத்தில் ஜனாதிபதியின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டுள்ளதுடன், குறித்த காலத்துக்கு முன்னதாகவே குழுவின் அறிக்கையை ...
Read More »
Eelamurasu Australia Online News Portal