ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானுக்கு முதல் பலி

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,999 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு சிட்னி முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த 80 வயதுள்ள முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் உறுதியானது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பலியானார். இது ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானக்கு ஏற்பட்ட முதல் பலியாகும்.
இவர் ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளார். ஆஸ்திரேலியாவில் மொத்தம் 6,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 524 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 55 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பிராட் ஹசார்ட் கூறுகையில், சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் தனிமைப்படுத்தும் முகாம்கள் குறைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விக்டோரியா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,999 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.