Tag Archives: ஆசிரியர்தெரிவு

பறக்கும் செல்ஃபி கமரா!

ஹோவர் நிறுவனத்தின் பறக்கும் கமரா சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கையடக்க கருவியின் மூலம் 12 எம்பி தரத்திலான புகைப்படங்களையும் 4கே தரத்திலான வீடியோக்களையும் எடுக்கமுடியும். நமது புகைப்படத்தை ஒருமுறை பதிவு செய்வதன் மூலம் வெளியிடங்களில் நம்மை சரியாக அடையாளம் கண்டுகொண்டு ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் திறன் கொண்டது. தலைக்கு மேலே 20 மீட்டர்வரை பறக்கக்கூடியது. 242 கிராம் எடை கொண்ட இந்த கமராவுக்கு ஹோவர் கமரா பாஸ்போர்ட் ட்ரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது

Read More »

இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல்!

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.   பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் திகதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கிரிக்கெட் வீரராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய இம்ரான்கானின் (வயது 65) தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து, சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டணி அரசு அமைக்கும் நிலை உள்ளது. தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள இம்ரான்கான் என்றைக்கு பதவி ஏற்பார் என்பதில் ...

Read More »

கிணற்றிலிருந்து நீரைப்பெறுவதற்கு கடற்படையினருக்கு தடை!

ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்குழி எனும் பகுதியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் நன்னீர் பெறுவதற்கு தடை விதித்து பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை பிரதேச சபை அமர்வு நேற்றைய தினம் தவிசாளர் ம.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞா.லக்ஸ்மன் கடற்படையினர் பொதுமக்களின் பாவனையில் உள்ள நன்னீர் கிணற்றில் கடற்படையினர் நன்னீர் எடுப்பதனை தடை செய்ய வேண்டும் என கோரி பிரேரணையை முன் மொழிந்தார். குறித்த பிரேரணை சபையில் ஏக மனதாக ...

Read More »

தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா!

சட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா. தென் கொரியாவை சேர்ந்தவர் சியோவ் (வயது 34). இவர் கடந்த ஜூலை மாதம் 22-ந் திகதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை நேற்று வடகொரியா விடுதலை செய்துவிட்டது. இது குறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், “வடகொரியா இன்று (நேற்று) காலை 11 மணிக்கு நம் நாட்டைச் சேர்ந்த சியோவ் என்பவரை பான்முன்ஜோமில் ...

Read More »

மீண்டும் ஐ.நா வில் அரசாங்கத்தை காப்பாற்ற துடிக்கும் கூட்டமைப்பு!

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் சிறிலங்கா அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். ஜ.நாவின் கால அவகாசம் முடியும் நிலையில், இலங்கை விடயத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் எழுந்துள்ளது என்றும், அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நேற்று நண்பகல் ஊடகவியலாளர் ...

Read More »

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்!

திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார். தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது. சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது. இந்நிலையில் 27.07.2018 அன்று இரவு கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்று நள்ளிறவு 1.30 மணியளவில் ...

Read More »

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்!

யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளரான த.காண்டீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, ‘தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் 3 சிகிச்சை பிரிவுகள் உள்ளன. அவற்றில் தலா 6 வைத்தியர்கள் வீதம் 18 வைத்தியர்கள் இருக்கவேண்டும். ஆனால் 9 வைத்தியர்களே இருக்கிறார்கள். அவர்களிலும் 5 பேர் இப்போது இடமாற்றம் பெறவுள்ளனர். அதன் பின்னர் புற்றுநோய் வைத்தியசாலையில் 4 வைத்தியர்களே கடமையாற்றவுள்ளனர். ...

Read More »

சம்பந்தனே எதிர்கட்சி தலைவர்!

எதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனே தொடர்ந்தும் பதவிவகிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களின் சந்திப்பில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர கட்சியின் முடிவை நாடாளுமன்ற சபாநாயகரிற்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  

Read More »

அப்பாவின் உடலைத் தேடி ஒரு பயணம்..

`நான் என் இலக்கை நோக்கிய பயணத்தைத் தனியாகத் தொடங்கினேன். போகும் வழியில் என்னோடு மக்கள் பலர் இணைந்துகொள்ள, நாங்கள் ஒரு வண்டியாக மாறிவிட்டோம்’ என்ற உருதுமொழிக் கவிதையோடு தொடங்குகிறது `கர்வான்’. பயணங்களைப் பற்றிய திரைப்படங்களில் எப்போதும் பயணம் என்பது இடங்களுக்கு இடையில் மட்டும் இல்லாமல், பயணப்படும் மனிதர்களின் ஆழ்மனதை நோக்கியும் இருக்கும். எதிர்பாராத பயணங்கள் மனிதர்களின் ரெகுலாரான வாழ்க்கையிலிருந்து மாறுதல் அளிப்பவை. `கர்வான்’ அதையே பேசுகிறது. சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மனதுக்குப் பிடிக்காத வேலையையும், கொடுமைக்கார முதலாளியையும் சமாளிக்கும் சராசரி இளைஞன் அவினாஷ் ராஜ்புரோஹித் (துல்கர் சல்மான்). ...

Read More »

கிழக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களின் மழைக்காலம்!

கிழக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களின் மனதில் மட்டுமே இருந்திருக்கிறது இந்த மழைக்காலம். மழை, மழையிலிருந்து புறப்படும் மண்வாசம், அந்த மண்வாசம் தரும் நினைவுகள் என எதுவும் இவ்வாண்டு கிழக்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு இல்லை. அந்த அளவுக்கு கோடை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வறட்சியானது மிக மோசமாக வேளாண் பண்ணைகளை பாதித்து இருக்கிறது. வானிலிருந்து ராய்ட்டர்ஸ் புகைப்பட கலைஞர் டேவிட் கிரே எடுத்திருக்கும் புகைப்படமானது இந்த வறட்சியின் பாதிப்பை அதே அடர்த்தியில் நமக்கு உணர்த்துகிறது. அந்த புகைப்படங்களை இங்கே   இங்கு ...

Read More »