நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நாடாளுமன்றப் பதவி முத்திரை மற்றும் நாடாளுமன்றக் கடிதத் தலைப்பு போன்றவற்றை மோசடியான முறையில் பயன்படுத்தினார் எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலயத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அந்த விசாரணைகள் குற்றத்தடுப்புப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனக் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பதவிமுத்திரை மற்றும் நாடாளுமன்றக் கடிதத் தலைப்பு போன்றவை களவாடப்பட்டுத் தவறானமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கடந்த ஜூன் மாதம் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அந்த முறைப்பாட்டை அடுத்து ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வடக்கில் மீண்டும் இராணுவப்பதிவுகள்!
புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் ஆமை வேகத்தினை அடைந்திருப்பதாக சபையில் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கில் மீண்டும் இராணுவப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், ஊழல் மோசடிகள் குறித்து தற்போது பேசப்படுகின்றது. கடந்த ஆட்சியாளர் தற்போதுள்ளவர்களையும், தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஆட்சியாளர்களையும் சுட்டிக்காட்டும் படலம் தொடர்ந்தவண்ணமுள்ளது. புதிய ...
Read More »கிளிநொச்சியில் குண்டுச்சத்தங்கள்! மக்கள் விசனம்!
கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2 மாதங்களாக குறித்த பகுதியில் இவ்வாறு குண்டுகள் செயலிழக்க பண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனால் தாம் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் இவ்வாறான செயற்பாடுகள் ...
Read More »ரவி கருணாநாயக்க பதவி விலகினார்!
வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இன்று(10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று பனல் ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் தனது விஷேட உரையில் தொடர்ந்து கூறியதாவது, அன்று அமைச்சர்களுக்கு எதிரான குற்றக் கோப்புக்களை விசாரிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முடியாதிருந்தது. அந்தவகையில் தற்போது மிகவும் துரிதகதியில் நல்லாட்சியில் அமைச்சர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காக நான் பெருமைப்படுகின்றேன். அதேபோன்று சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு நான் கூறுகின்றேன், கடந்த அரசாங்கம் தொடர்பாக ...
Read More »சுமந்திரன் மீதான கொலை வழக்கு! சிறிலங்காவின் புலனாய்வு அதிகாரிகள் அவுஸ்ரேலியா விரைவு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியை நாடுகடத்த சிறிலங்காவில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவினர் அவுஸ்ரேலியாவிற்கு பயணமாகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய இரு தடவைகள் முயன்றதோடு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புகளைப் பேனியத்துடன் உயிராபத்தை ஏற்படுத்தும் வெடிபொருட்களையும் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கிளிநொச்சி நீதிமன்றில் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முக்கிய சூத்திரதாரி எனக் கருதப்படுபவர் அவுஸ்திரேலியாவில் வாழ்வதாக கண்டறியப்பட்டு ...
Read More »அவுஸ்ரேலியாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சமகால அரசியல் கலந்துரையாடல்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலும் சிட்னியிலும் சமகால அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்குகொள்ளவுள்ளார். தற்போதைய சமகால அரசியல் தொடர்பிலும் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கலந்துரையாடலை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Read More »நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவ நபருக்கு கொடுத்த உணவுப் பொதியில் ரெஸ்ரர்!
நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் முதன்மைச் சந்தேக நபர் என்று பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட சிவராசா ஜெயந்தனுக்குக் கொடுப்பதற்காக அவரது மனைவி கொண்டு வந்த உணவுப்பொதியில் இருந்து மின்சாரக் கடத்தலைப் பரிசோதிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ’ரெஸ்ரர்’, சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெயந்தனின் மனைவி சிறைச்சாலை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டார். நல்லூர் கோயில் பின் வீதியில் கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்திருந்தார். இந்தச்சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மைச் சந்தேகநபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் ...
Read More »விடுதலைப்புலிகளின் சொத்துகள் மீதான தடை தொடரும்: ஐரோப்பிய யூனியன்
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கினாலும், அந்த இயக்கத்தின் சொத்துகள் மீதான தடை தொடரும் என ஐரோப்பிய யூனியன் அறிவித்து உள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பை, பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்து கடந்த 2006-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இயக்கத்தின் சொத்துகளும் முடக்கப்பட்டன. ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் லக்சம்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் கோர்ட்டில் (நீதிக்கான ஐரோப்பிய கோர்ட்டு) வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த ...
Read More »ஆட்சிக் கவிழ்ப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது! – சம்பந்தன்
ஆட்சியைக் கவிழ்க்கத் துடிக்கும் மகிந்த அணியின் முயற்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என நேற்றுச் சபையில் திட்டவட்டமாக அறிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன். தன்னையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கடுமையாக விமர்சித்த மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு சம்பந்தன் உடனடியாகவே பதிலடி கொடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின்கீழ், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் பிரகடனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ...
Read More »கிளிநொச்சி விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதி விருது!
கிளிநொச்சி-செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. இதன்படி கிளிநொச்சி செல்வா நகரைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனம் இராஜகோபால் (வயது-59) என்பவருக்கே தேசிய ரீதியில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. விருதுடன், சான்றிதழ் பெற்ற இவருக்கு நான்கு இலட்சம் ரூபா பணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2016 இல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவ் விருது வழங்கப்பட்டது.
Read More »