ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதப்படைகளை இலங்கைக்குள் களமிறக்கவில்லை. எனவும் இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பில் மட்டுமே இலங்கை உள்ளது என இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் நெருக்கடி நிலைமைகளை அடுத்து இலங்கைக்குள் அமெரிக்க இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்ற நிலையில் அதன் உண்மைத்தன்மை குறித்து வினவிய போதே இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். இலங்கைக்குள் எந்தவித சர்வதேச இராணுவ படைகளும் களமிறக்கப்படவில்லை, குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் இராணுவப்படைகள் இலங்கைக்குள் குவிக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. இதற்கு ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆஸ்திரேலியா மந்திரிசபையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்!
ஆஸ்திரேலியா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான மந்திரிசபையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டங்கள் குறித்த செய்திகளை சேகரிப்பதற்கான வாய்ப்பை சபாநாயகரின் அனுமதியுடன் ஊடகங்களுக்கு பெற்றத்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிவில் அமைப்புக்களின் பிரநிதிகள் சிலரை அண்மையில் சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தெரிவுக்குழுவின் குறுக்கு விசாரணைகளை கேட்டல், அவற்றுக்கு வழங்கப்படும் பதில்களை முழுமையாக சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதன் ஊடாக ...
Read More »அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 29 பேர் விளக்கமறியலில்!
சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 41 பேரில், 8 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை இன்று மாலை காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனுடன் அதிலிருந்த 4 பெண்கள், தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எனினும் எஞ்சிய 29 ஆண்களையும் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஹர்சன கெக்குனுவெல உத்தரவிட்டுள்ளது. அண்மையில் ...
Read More »ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல்தர வர்த்தகர்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதா இல்லையா என்பதை தற்போது கூறமுடியாத போதும் நாட்டுக்காக களமிறங்குவதற்கு தயாராக உள்ளேன் என்று முதல்தர வர்த்தகரான தம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பினை அடுத்து ஜனாதிபதி அல்லது பிரதமர் வேட்பாளராக தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டுக்காக எட்டு வருடங்கள் சேவையாற்றிருந்தேன். தற்போதும் நாட்டுக்காக சேவையாற்றுவதற்கு தயாராகவே உள்ளேன். இன, மத, மொழி, கட்சி பேதமின்றி ...
Read More »தற்கொலை தாக்குதல்! -தொலைபேசிகள் ஆராயப்படுகிறது!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் 86 பயங்கரவாத சந்தேக நபர்களின் கைத்தொலைபேசிகளும் தற்பொழுது ஆராயப்பட்டு வருவதாக சிரேஷ்ட காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்களுக்கும் தடைசெய்யப்பட்ட தெளஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் மற்றும் அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் ஆகியோருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, இதுதொடர்பான விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பல்வேறு தொலைத்தொடர்பு நிலையங்களில் இருந்து இதுகுறித்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் கூறினார். இதேவேளை, பயங்கரவாதி சஹ்ரானால் 8 சிம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவரது ...
Read More »இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
சவுதாம்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 12 ரன்னில் வீழ்த்தியது. சவுதம்டனில் நடைபெற்ற மற்றொரு உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்தும் மோதியது. காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆடவில்லை. அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தினார். டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் 43 ரன்னும், ஷான் மார்ஷ் 30 ...
Read More »வடகொரியா ஏவுகணை பரிசோதனை! எனக்கு இடையூறு இல்லை!
வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில், வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. இதனால் என்னுடைய நிர்வாகத்தில் ...
Read More »காவல் துறை உத்தியோகத்தர் கொலை சம்பவம்; சந்தேகநபர்கள் 3 பேர் கைது !
மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை காவல் துறை நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதோடு , மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை எதிர்வரும் 11ஆம் திகதி தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சி.ஜ.டியினர் தெரிவித்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை காவல் துறை நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்னா என்ற காவல் துறை உத்தியோகத்தர் கடமைமுடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் ...
Read More »அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி!
ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது ...
Read More »அவுஸ்திரேலியர்களின் விருப்பத்துக்குரிய வாகனம் விடைபெறுகின்றது!
அவுஸ்திரேலிய குடும்பங்களின் விருப்பத்துக்குரிய வாகனமாக நீண்டகாலம் சந்தையில் கோலோச்சிய Toyota Tarago 36 வருடங்களுக்கு பிறகு விடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Toyota நிறுவனம் இந்த விடயம் அறிவித்துள்ளது. 1983 இல் சந்தைக்கு வந்த இவ்வாகனம் உடனடியாகவே அவுஸ்திரேலிய குடும்பங்களின் விருப்பத்துக்குரியதாக மாறியது. 80 – 90 களில் பெரிய குடும்பங்களின் விருப்பத்துக்குரிய வாகனமாக வசீகரித்துக்கொண்ட – 12 ஆசனங்களைக்கொண்ட – Toyota Tarago சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்த வாகனத்தின் ...
Read More »