சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 41 பேரில், 8 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று மாலை காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனுடன் அதிலிருந்த 4 பெண்கள், தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எனினும் எஞ்சிய 29 ஆண்களையும் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஹர்சன கெக்குனுவெல உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் குறித்த 41 பேரும் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தென்கடற்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
Eelamurasu Australia Online News Portal