ஆஸ்திரேலியா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான மந்திரிசபையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டங்கள் குறித்த செய்திகளை சேகரிப்பதற்கான வாய்ப்பை சபாநாயகரின் அனுமதியுடன் ஊடகங்களுக்கு பெற்றத்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிவில் அமைப்புக்களின் பிரநிதிகள் சிலரை அண்மையில் சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தெரிவுக்குழுவின் குறுக்கு விசாரணைகளை கேட்டல், அவற்றுக்கு வழங்கப்படும் பதில்களை முழுமையாக சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதன் ஊடாக பக்கச்சார்பாக செயற்படுவதற்காக காணப்படும் இடம் தடுக்கப்படும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு பேர், அவிசாவளை குருகல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இவ்வாறு அவிசாவளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், கணவன் மற்றும் மனைவியும் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 2 ஆயிரத்து 115 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதோடு, அவர்களின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது அங்கிருந்து டி-56 ரக இரவைகள் நூறு மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களான கணவனும், மனைவியும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
151 இடங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான தொழிற்கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புக்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில், பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான புதிய மந்திரிசபையில் அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை மந்திரியாக லின்டா ரெய்னால்ட்ஸ், வெளியுறவுத்துறை மற்றும் மகளிர் நலத்துறை மந்திரியாக மரிசே பய்னே உள்பட மொத்தம் 7 பெண்களுக்கு மந்திரிகளாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களின் மூலம் அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடையும் என்று நம்புவதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal