தமிழ்த தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமண கோரிக்கை விடுத்துள்ளார். ‘கொவிட் -19’ இற்கான தடுப்பூசி உட்பட மருத்துவ உபகரணங் களைக் கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் தயாராகவே இருக்கின்றனர். இதற்கான அனுமதியை அரசு வழங்கினால் திட்டத்தை செயற்படுத்தக்கூடியதாக இருக்கும்” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் விடுத்துள்ள அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி நிதி ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் 4 மரணங்கள் 64 பேருக்கு கொரோனா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலமான நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியில் இருந்து இன்று புதன்கிழமை காலை 10 மணிவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்து ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் காத்தான்குடி சுகாதார ...
Read More »சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் ஒருவருக்கு பாதிப்பு
சீனாவில் உருவான கொரோனா வைரசின் அலைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அங்கு உருமாறிய பறவைக்காய்ச்சலால் 41 வயது மனிதர் ஒருவர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் மனிதர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரசின் அலைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அங்கு உருமாறிய பறவைக்காய்ச்சலால் 41 வயது மனிதர் ஒருவர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜியாங்சு மாகாணத்தின் ஜென்ஜியாங் நகரை சேர்ந்தவர் ஆவார். தற்போது அவரது உடல்நிலை சீராக ...
Read More »160 இந்திய யூதர்கள் இஸ்ரேலுக்கு குடி பெயர்ந்தனர்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான, மணிப்பூர் மற்றும் மிசோரமில் பினெய் மெனாஷே என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். யூதர்களில் மலைவாழ் பிரிவினரான இவர்கள், 2,700 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இந்தியா உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. பினெய் மெனாஷே இனத்தவரை, யூதர்களாக அங்கீகரிப்பதாக, இஸ்ரேலைச் சேர்ந்த யூதத் தலைவர்கள் அறிவித்தனர். அதன்பின், இந்த இன மக்கள், இஸ்ரேலுக்கு படையெடுக்கத் துவங்கிவிட்டனர். அந்த வகையில் இந்தியாவில் இருந்து இதுவரை 2500-க்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து உள்ளனர். இந்தநிலையில் ...
Read More »ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையோருக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல்
குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் சஞ்ஜெய் ராஜரத்னம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார். 48 ஆவது சட்டமாதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜெய் ராஜரத்னம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்தார் புதிய சட்டமாதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம். வி எக்பிரஸ் பேர்ல் ...
Read More »யாழில் இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள்
கொவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 சதவீதமானோர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் ...
Read More »14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வீடு திரும்பினர்
4-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந் தேதி இந்தியாவில் தொடங்கி நடந்தது. இந்த போட்டியின் போது மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணிகளை சேர்ந்த 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் வேறுவழியின்றி கடந்த மாதம் 4-ந் தேதி போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் உடனடியாக வீடு திரும்பினர். வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப இந்திய கிரிக்கெட் வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விரைவாக அனுப்பி வைத்தது. இந்தியாவில் ...
Read More »தாதிமார் இன்று சுகவீன விடுமுறைப் போராட்டம்
அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதிமார்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதன்படி இன்று சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபடவுள்ளனர் என்று அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி. மெதிவத்த ஊடகங்களிடம் தெரிவித்தார். வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் தாதிமார் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் முறையான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளனர் எனவும், இதனாலேயே தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளோம் எனவும் மெதிவத்த குறிப்பிட்டார். இந்தத் தீர்மானத்துக்கமைய இன்று காலை முதல் நாளை காலை வரையில் பணிகளில் இருந்து தமது சங்கத்தின் ...
Read More »அவுஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரியாக நிக் ஹாக்லி நியமனம்
அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இங்கிலாந்தில் பிறந்த நிக் ஹாக்லி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு நிக் ஹாக்லியை நியமித்ததை அவுஸ்திரேலிய கிரிக்கெட் திங்களன்று (மே 31) உறுதிபடுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொண்டு கடந்த பருவத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதை மேற்பார்வையிடும் ஹாக்லி, 2020 ஜூன் முதல் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். கிரிக்கெட்டுக்கு முன்னர், 2012 லண்டன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான வணிக பேச்சுவார்த்தைகளின் தலைவராக ஹாக்லி இருந்தார். ...
Read More »புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் பங்களிப்பை செய்திருக்கின்றனர்!
ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் மீள்குடியமர ஆஸ்திரேலிய சமூகங்கள் உதவுவதாகக் கூறியிருக்கிறார் ஈழத்தமிழ் அகதியான சங்கர் காசிநாதன். தனது சொந்த அனுபவத்தில் இதைக் கூறுவதாக சங்கர் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த எங்களது குடும்பம் மீள்குடியமர ஆஸ்திரேலியாவில் எங்கள் அருகாமையில் வசித்தவர்கள் உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு தேவையான பொருட்களைப் பெற, உடைகளைப் பெற, வேலைகளைப் பெற உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு உணவுக்கூட அளித்திருக்கிறார்கள்,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் நல உதவிகளிலேயே வாழ நாங்கள் ஆஸ்திரேலிய வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள சங்கர், ...
Read More »