அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இங்கிலாந்தில் பிறந்த நிக் ஹாக்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு நிக் ஹாக்லியை நியமித்ததை அவுஸ்திரேலிய கிரிக்கெட் திங்களன்று (மே 31) உறுதிபடுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொண்டு கடந்த பருவத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதை மேற்பார்வையிடும் ஹாக்லி, 2020 ஜூன் முதல் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.
கிரிக்கெட்டுக்கு முன்னர், 2012 லண்டன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான வணிக பேச்சுவார்த்தைகளின் தலைவராக ஹாக்லி இருந்தார்.
அதற்கு முன்னர் அவர் சிட்னி மற்றும் லண்டனில் உள்ள பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸில் மூத்த நிறுவன நிதிப் பாத்திரங்களை வகித்துடன், அங்கு அவர் ஒரு பட்டய கணக்காளராகவும் தகுதி பெற்றார்.
இந் நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவிக்கப்பட்டதற்கு பெருமைப்படுவதாக ஹாக்லி கூறினார் .