திருகோணமலை – வரோதய நகர், புதுக்குடியிருப்பு மக்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் உண்பதற்கு உணவின்றி கஷ்டப்பட்டு வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர். தமது கிராமத்தில் விறகு வெட்டுதல் மற்றும் கூலித்தொழில் செய்தல் போன்றவற்றை பிரதான தொழிலாக மேற்கொண்டு வந்த நிலையில் ,வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உண்பதற்கு உணவின்றி தவிர்ப்பதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தினால் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளியே செல்வதை அடை செய்திருந்த போதிலும் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி விற்பனை செய்வதற்கு கூட வீதியால் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வவுணதீவில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவர் கைது
மட்டக்களப்பு – வுவுணதீவு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை இன்று கைது செய்துள்ளதுடன், இரு துப்பாக்கிகளை மீட்டுள்ளதாக வவுணதீவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவதினமான இன்றுகாவல் துறையினர் வவுணதீவு காவல் துறை பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை மற்றும் நெல்லிக்காடு ஆகிய இரு பிரதேசங்களில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை கைது செய்துள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read More »பிரியா – நடேஸ் குடும்பத்தை நியூசிலாந்து / அமெரிக்காவில் குடியமர்த்த திட்டம்!
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பிரியா – நடேஸ் குடும்பம் நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியமர்த்தப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த குடும்பத்தை எங்கே குடியமர்த்துவது என்பது தொடர்பில் உள்துறை அமைச்சர் Karen Andrews-இன் அலுவலகம் ஆராய்ந்துவருவதாகவும், ஆனால் இவர்களை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்துவது தொடர்பில் ஆராயப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார். Nine Radio-வுக்கு வழங்கிய நேர்காணலில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் Marise Payne, குறித்த குடும்பத்தை அமெரிக்காவில் அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான வாய்ப்பு ...
Read More »டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முந்தைய நிர்வாகத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தது. சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் அமெரிக்க கோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ ...
Read More »12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சோதனை- பைசர் நிறுவனம் தொடங்கியது
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகளும் இறக்குமதி செய்துள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் ஆகியவை இணைந்து தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்துக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்து பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. அதேபோல் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகளும் இறக்குமதி செய்துள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே 12 முதல் 15 ...
Read More »ஜனாதிபதி செயலக இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் என்ற செய்தியை வெளியிட்டவர் கைது
ஜனாதிபதி செயலக இணையத்தளம் உட்பட பல முக்கிய இணையத்தளங்கள் சைபர் தாக்குதலிற்குள்ளாகியுள்ளன என போலிச்செய்தியை பகிர்ந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை தகவல்தொழில்நுட்ப சமூகத்தின் தலைவர் ரஜீவ் மத்யு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்தவாரம் ஜனாதிபதி செயலகம் வெளிவிவகார அமைச்சு உட்பட பல இணையத்தளங்கள் சைபர் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளன என தகவலை பகிர்ந்துகொண்டார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களிற்காக 23 வயது ரஜீவ் மத்யு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More »ஐந்து நட்சத்திரஹோட்டல் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு மரண அச்சுறுத்தல்
பத்திரிகையாளரும் ஜனாதிபதி ஊடகபிரிவின் முன்னாள் இயக்குநருமான சமுடித்த சமரவிக்கிரம தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காவல் துறை மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவர்களின் விபரங்களை எதிர்காலத்தில் வெளியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் எனக்கு எதிராக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எதிர்காலத்தில் நான் இவர்களின் விபரங்களை வெளியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். எனக்கு எதிரான இந்த நடவடிக்கைககு ஆதரவளிப்பவர்களிடமிருந்து ...
Read More »அவுஸ்திரேலியாவில் ஆபத்தான நபராக மாறிய இலங்கையர்
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்போது பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரசிற்கு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற நபரே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 8 ம் திகதி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற நபர் ஒருவர் மூலமே அங்கு வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 40 வயது நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய வேளை அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நபர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பியதை தொடர்ந்து ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 23 ம் ...
Read More »இளவரசர் ஹாரி- மேகன் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை
இங்கிலாந்து அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன், அரச குடும்பத்தில் இருந்து விலகுகிறேன் எனக் கூறி இளவரசர் ஹாரி அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சகோதரர் வில்லியம் உடன் இங்கிலாந்து அரச அரண்மனையில் வாழ்ந்து வந்தார். அதன்பின் அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறி மனைவியுடன் அமெரிக்கா சென்றுவிட்டார். ஏற்கனவே இந்த தம்பதிக்கு கடந்த 2019-ம் ...
Read More »71 கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து கம்போடிய நாயகனாக வலம் வந்த எலி ஓய்வு
கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் திறன்கொண்ட ஆப்பிரிக்க எலி மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப்பிரிக்க எலி பயிற்சி பெற்று இருந்தது. இதன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகளை நுகர்ந்து கண்டுபிடிக்கும் திறன்கொண்டது. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்த எலியானது, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப்போல, உருவத்தில் சிறியதாக இருந்தாலும், இதுவரை 71 கண்ணி வெடிகளைக் கண்டு பிடித்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இதனால், மகவாவிற்கு ...
Read More »