முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பதிவயை பறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என அவர் தெரிவித்த கருத்துக்கு எதிராகவே மேற்கண்ட ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு: தயாராகிறது ஹாலிவுட் திரைப்படம்!
உலகையே மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் விரைவில் ஹாலிவுட் திரைப்படமாகிறது. நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தத்ரூபமாக படமாக்க ஹாலிவுட் வட்டாரம் தயாராகி வருகிறது. தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் மியான்மர் எல்லையில் தாம் லுவாங் என்ற குகையில் உள்ளது. சுமார் 10 கி.மீ நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். ‘வைல்டு போர்’ என்ற கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த, 11 வயது முதல் 16 வயது கொண்ட சிறுவர்கள் கடந்த 23-ம் திகதி இந்தக் குகைக்கு சென்றனர். ...
Read More »“குகையினுள் நிலைமை மோசமாக இருந்தாலும், புன்னகையுடன் எங்களுக்கு மிகவும் உதவிய சிறுவன்”!-கடற்படை
தாய்லாந்துக் குகையில் சிக்கியவர்களை மீட்ட வீரர்கள், பொதுமக்களின் பாராட்டு மழையில் நனைந்துவருகின்றனர். ஆனால், ‘குகையில் இருந்த சிறுவர்களில் ஒருவன், அனைவருக்குமே ஹீரோவாகத் திகழ்ந்துள்ளான்’ என்கின்றனர் மீட்புப்படை வீரர்கள். தாய்லாந்துக் குகைக்குள் சென்ற 13 சிறுவர்கள் திடீரெனப் பெய்த மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இந்தச் சிறுவர்களை மீட்கும் பணியில் பல்வேறு சிரமங்களைத் தாண்டி சாதித்தனர் மீட்புப்படை வீரர்கள். 18 நாள்களாக நீடித்த கடும் போராட்டத்தின் பயனாக, அனைத்து சிறுவர்களையும் வெளியில் கொண்டுவந்துவிட்டனர். இந்தப் பணியின்போது, குகைக்குள் சிக்கிய ஒரு சிறுவன் மீட்பு படையினருக்கு மிகவும் உதவியதாக, தாய்லாந்து ...
Read More »இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவி நீடிப்பு!
இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீடிப்பை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
Read More »தாய்லாந்து குகைக்குள் சிறுவர்களுடன் தங்கிய ஆஸி. வைத்தியருக்கு நேர்ந்த சோகம்!
தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கச் சென்ற நீச்சல் வீரர்களில் ஒருவரானத ஆஸ்திரேலிய வைத்தியரின் தந்தை நேற்று மரணமடைந்தார். தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் திகதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம். இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த 2-ம் திகதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த செய்தி பரபரப்பானது. அவர்களை எப்படி மீட்பது ...
Read More »`நான் பெற்ற அன்பு எல்லையில்லாதது!’-புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் `காதலர் தினம்` பட நாயகி சோனாலி பிந்த்ரே, தன் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில், `உங்களது ஆதரவால் நான் தனியாக இல்லை’ எனப் பதிவிட்டுள்ளார். புற்றுநோயின் பிடியிலிருந்து நடிகை மனீஷா கொய்ராலா மீண்டு வந்த நிலையில், சோனாலி பிந்த்ரேவும் புற்றுநோயின் பிடியில் சிக்கியிருப்பது பாலிவுட் நடிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அமெரிக்கா, நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்று வரும் அவர், தன் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில்,`நம்முள் மறைந்திருக்கும் அந்தவலிமையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் வரை நாம் எப்படி வலுவாக இருக்கிறோம் ...
Read More »ஐந்து கமரா கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்!
சாம்சங் நிறுவன ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் ஐந்து கமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் சாம்சங் நிறுவனம் டூயல் செல்ஃபி கமரா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. கொரிய செய்தி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் தகவல்களில், புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கமராக்களை வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இவற்றில் வேரியபிள் அப்ரேச்சர் சென்சார், சூப்பர் வேடு-ஆங்கிள் ...
Read More »விஜயகலாவின் கருத்து அல்ல அது மக்களுடையது!- ஜீ.குணசீலன்
“இன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் உட்பட பல்வேறு விதமானவர்கள் மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே முனைப்பாக இருக்கின்றனர்” என வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். வட மாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. கொள்ளை,கொலை, பாலியல் வன்புனர்வு போன்ற பல்வேறு விதமான குற்றச் செயல்கள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது. குறித்த குற்றச் ...
Read More »தமிழ் மக்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!
தமிழ் மக்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள் இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் என தேசிய சகவாழ், கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் அரசாங்கத்துடன் இணைய முடியாது. கொழும்பிலே தமிழ் மக்களை வெள்ளை வேனில் ...
Read More »”உங்கள் மீது யாருக்கும் கோபமில்லை”!தாய்லாந்து பயிற்சியாளருக்கு பெற்றோர்கள் கடிதம்!
உங்கள் மீது யாருக்கும் கோபமில்லை என்று பயிற்சியாளருக்கு பெற்றோர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். தாய்லாந்தில் நீர் தேங்கியிருக்கும் குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளருக்கு நீரில் மூழ்க தெரியாது என்பதால் ஓர் இரவில் அவர்களை மீட்டுவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தின் தம் லுவாங் குகையின் ஒரு பகுதியில், ஏறக்குறைய இரண்டு வாரங்களாக சிக்கியிருக்கும் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.உயிருடன் இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த 2 நீர் மூழ்கி ...
Read More »