முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்குட்படுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மூலம், பிரிவு 12 (1) ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சட்டத்தின் சமமான பாதுகாப்புக்காக என்ற தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனுவின் இறுதித் தீர்ப்பு வரும் வரை துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவையும் மனுதாரர் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
எத்தியோப்பியாவில் கடும் உணவுப் பஞ்சம்: 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு?
எத்தியோப்பியாவின் டைக்ரே மாகாணத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. வெளியிட்ட அறிவிப்பில், “ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த 12 மாதங்களில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம். இப்பகுதியில் குழந்தைகளின் உடல் நலம் எங்களுக்கு அச்சத்தைத் தருகிறது. டைக்ரேவில் உள்ள கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பரிசோதனை ...
Read More »ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியான் 7 பதக்கங்கள் வென்று சாதனை
ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற அசுர சாதனையை ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4×400மீ மெட்லே ரிலே நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். அத்துடன் 2012-ம் ஆண்டு அமெரிக்க வீராங்கனைகள் 3 நிமிடம் 52.05 வினாடிகளில் கடந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் எம்மா மெக்கியான் இடம் பிடித்திருந்தார். இதில் தங்கப்பதக்கம் வென்றதுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் ...
Read More »விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் நைக் முத்திரை காலணிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் சித்தரிக்கப்பட்ட NIKE (நைக்) முத்திரை காலணிகள், தம்மால் தயாரிக்கப்படவில்லை என NIKE நிறுவனம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளமை தொடர்பில் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து NIKE Inc. நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது, அந்த நிறுவனம், குறித்த உற்பத்தி, தம்மால் தயாரிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளதாகசிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தமது புலமைச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, ...
Read More »ரூ. 2.5 கோடிக்கு விற்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்பம்
ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. முறையில் ஏலம் விடப்பட்டது. ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுச்சின்னங்கள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் இம்முறை ஜாப்ஸ், பணி வழங்க கோரி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விண்ணப்ப படிவத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு தனது ...
Read More »ஆப்கனில் ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
ஆப்கனில் ஐ.நா. சபை வளாகம் மீது நடந்த தாக்குதலில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தலிபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் அமைந்துள்ள ஐ.நா. ...
Read More »தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான, யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடேசன் தருமராசா, வவுனியாவைச் சேர்ந்த ஜோசப் செபஸ்ரியான், கிளிநொச்சியை சேர்ந்த நடராசா சர்வேஸ்வரன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கண்ணதாசன் ஆகியோரோ விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் நடேசன் தருமராசா, தனது ஒருவருட புனர்வாழ்வை முடித்து இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், பயங்கரவாத ...
Read More »கொவிட் தடுப்பூசி, டெல்டா வைரஸ் தொற்றுக் குறித்து முல்லை மக்கள் அச்சப்படத் தேவையில்லை
கொவிட் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு தவறான புரிதல்கள் இருக்கின்றன. அந்த தவறான புரிதல்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த அரிய சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை அனைத்து மக்களும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளவேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி வி.வஜிதரன் தெரிவித்துள்ளார். அதேவேளை டெல்டா வைரஸ் தொற்றுக்களோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை எவரும் இனங்காணப்படவில்லை எனவும், முல்லைத்தீவைச்சேர்ந்த ஒருவர் ஓமான் நாட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய நிலையில் அவருக்கு டெல்டா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளதாகவும் வைத்தியர் வி.வஜிதரன் ...
Read More »மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா 4-ம் அலை தாக்கும்
ஈரான், ஈராக், துனிசியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் உருமாற்றம் அடைந்தது. இதில் இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என்ற பெயரிடப்பட்டுள்ளது. டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே டெல்டா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து ...
Read More »ஆஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு இடையில் அதிகரிக்கும் மனநலப் பிரச்சனைகள்
ஆஸ்திரேலியாவில் மனநலச் சிகிச்சைக்கான தற்போதைய முறை புதிய நோயாளிகளுக்கான தேவையை கையாள முடியாத வகையில் உள்ளதாக மருத்துவர்களும் உளவியலாளர்களும் தெரிவித்திருக்கின்றனர். கொரோனா பரவி வரும் இன்றைய சூழலில், தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளுதல், அதிகமாக உண்ணுதல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆஸ்திரேலியர்கள் மருத்துவ ஆலோசனை கேட்பது அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மனநல நோயாளிகள் அதிகரிக்கும் நிலையில் குறைவான திறன் வாய்ந்த மனநல ஆலோசகர்களே இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போதைய நிலை ஆஸ்திரேலிய சுகாதார அமைப்பை பாதிக்கக்கூடும் என்றும் இதனால் வருங்கால தலைமுறையினரும் பாதிக்கப்படுவார்கள், பொருளாதாரமும் பாதிக்கப்படும் ...
Read More »