ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக ஆதரவை பெற்ற இந்தியா, உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கென சில நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகளை பெறுவதன் மூலம் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வாக முடியும். ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இணையத்தில் நாட் குறிப்பு எழுதலாம்!
நீங்கள் கடந்த மாதம் என்ன செய்தீர்கள்? கடந்த வாரம் என்ன செய்தீர்கள்? உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது? இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது டேபில்.மி இணையதளம். இது ஓர் இணைய டைரி சேவை. இதில் உங்களுக்கான பக்கத்தை உருவாக்கி, டைரி குறிப்புகளை எழுதிச் சேமித்து வைக்கலாம். இதில் உறுப்பினராகச் சேருவதும் எளிது. தொடர்ந்து டைரி எழுதிப் பராமரிப்பதும் எளிது. நினைவூட்டல் சேவையாகவும் பயன்படுத்தலாம். இமெயிலுடனான ஒருங்கிணைப்பு, ஹாஷ்டேக் வசதி, பதில் அளிக்கும் அம்சம் என பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன. இணைய முகவரி: https://dabble.me/
Read More »கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்!
அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கெளரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான சமகால அரசியல் கலந்துரையாடல் எதிர்வரும் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 4.30 மணியிலிருந்து மாலை 6.30மணிக்கு மெல்பேர்ண் மொவுண்வேவளி அல்வி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எனவே இவ் அரசியல கருத்தரங்கிற்கு அனைத்து தமிழ்மக்களும் வருகைதந்து இதில் கலந்துகொள்வதோடு உங்களது சந்தேகங்களையும் கேள்விகளையும் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டு தெளிவடைந்து கொள்ளலாம்!
Read More »குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய காணியை தொல் பொருள் திணைக்களம் அபகரிக்க எடுத்த முயற்சி நிறுத்தம்!
குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய காணியை தொல் பொருள் திணைக்களம் அபகரிக்க எடுத்த முயற்சி ஆலய நிர்வாக சபையினர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு தமது ஆவணங்களை சமர்பித்தன் அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஆலயத்திற்கு சொந்தமான காணி மற்றும் அங்கு தொல் பொருள் திணைக்களத்துடன் தொடர்வுடையதாக கூறப்பட்ட கற்துாண் போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்ட தொல்பொருள் திணைக்கள தலைமை அலுவலகத்தில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் குச்சவெளி பொலிஸார் ஆகியோர் தமக்கு குச்சவெளியில் உள்ள இன்னுமொரு தொல் பொருள் ...
Read More »இடைக்கால அரசாங்கத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு!
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக நாங்கள் தலையிட விரும்புகின்றோம் மக்களை காப்பாற்ற விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இடைக்கால அரசாங்கம் குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இதுவரை இடம்பெறவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இடைக்கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே ...
Read More »நான்கு கமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்!
நான்கு பிரைமரி கமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் நான்கு பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கிறது. இதில் 24 எம்.பி சென்சார், f/1.7, 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி கேமரா டெப்த் விவரங்களை படம்பிடிக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ...
Read More »அவுஸ்திரேலியாவில் 7 பெண்கள் கொலை!
8 நாட்களில் 7 பெண்கள் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒக்டோபர் 3ம் திகதி Nicole Cartwright என்ற 32 வயதுப் பெண் கொலைசெய்யப்பட்ட நிலையில் இவரது உடல் சிட்னி பூங்கா ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது. அதேபோன்று அன்றைய தினம் விக்டோரியாவில் 46 வயதான Gayle Potter என்ற 3 பிள்ளைகளின் தாய் தனது முன்னாள் கணவனால் காரால் மோதி கொல்லப்பட்டதாக தெரியவந்தது. அதேநேரம் Northern Territory இல் 29 வயதுப்பெண் ஒருவரும் குடும்ப வன்முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒக்டோபர் 4ம் திகதி விக்டோரியாவின் ...
Read More »அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி மூன்றாவது நாளாக நடை பயணம் தொடர்கிறது!
அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் காலை ஆரம்பித்த நடைபவனியில் பங்கேற்ற மாணவர்கள், நேற்று ...
Read More »அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளம் இல்லையாம்!
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை அமைக்கலாம் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிறிலங்கா இது குறித்து அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தியுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவலகம் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. சிறிலங்காவில் சீனாவின் கடற்படை தளம் உருவாகலாம் என சிலர் கற்பனை செய்கின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது சிறிலங்காவின் துறைமுக அதிகார சபைக்கும் சீனா மேர்ச்சன்ட் நிறுவனத்திற்கும் இடையிலான வர்த்தக முயற்சி எனவும் குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவின் சீனாவின் ...
Read More »அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயல்!
அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு கூறி உள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் புயல் மையம் கொண்டு இருந்தது. அந்த புயலுக்கு ‘மைக்கேல்’ என்று பெயர் சூட்டி இருந்தனர். அது, புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு அமெரிக்காவை புயல் தாக்கியது. முதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. மணிக்கு 200-ல் இருந்து ...
Read More »