நீங்கள் கடந்த மாதம் என்ன செய்தீர்கள்? கடந்த வாரம் என்ன செய்தீர்கள்? உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது? இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது டேபில்.மி இணையதளம்.
இது ஓர் இணைய டைரி சேவை. இதில் உங்களுக்கான பக்கத்தை உருவாக்கி, டைரி குறிப்புகளை எழுதிச் சேமித்து வைக்கலாம். இதில் உறுப்பினராகச் சேருவதும் எளிது. தொடர்ந்து டைரி எழுதிப் பராமரிப்பதும் எளிது.
நினைவூட்டல் சேவையாகவும் பயன்படுத்தலாம். இமெயிலுடனான ஒருங்கிணைப்பு, ஹாஷ்டேக் வசதி, பதில் அளிக்கும் அம்சம் என பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.
இணைய முகவரி: https://dabble.me/
Eelamurasu Australia Online News Portal