குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய காணியை தொல் பொருள் திணைக்களம் அபகரிக்க எடுத்த முயற்சி ஆலய நிர்வாக சபையினர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு தமது ஆவணங்களை சமர்பித்தன் அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ஆலயத்திற்கு சொந்தமான காணி மற்றும் அங்கு தொல் பொருள் திணைக்களத்துடன் தொடர்வுடையதாக கூறப்பட்ட கற்துாண் போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்ட தொல்பொருள் திணைக்கள தலைமை அலுவலகத்தில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் குச்சவெளி பொலிஸார் ஆகியோர் தமக்கு குச்சவெளியில் உள்ள இன்னுமொரு தொல் பொருள் சின்னங்களுடன் தொடர்புடைய காணி தொடர்பாகவே முறைப்பாடு வந்துள்ளது.
எனினும் சில பௌத்த மதகுருமார் இக்காணியில் உள்ள கல்துாண் தொடர்பாக தெரியப்படுத்தியதன் காரணமாக இக்காணியில் விவசாய நடவடிக்கைக்கு எம்மால் தடைவிதிக்கப்பட்டிருந்து.
எனவே தற்போது நீங்கள் உங்களுடைய இயல்பான நடைவடிக்கைகளை இக்காணிக்குள் மேற்கொள்ளுமாறும் குறித்த காணி தொல்பொருளுடன் சம்மந்தம் இல்லை என்ற அறிக்கையிணை தாம் சம்மந்தப்பட்ட மேலதிகாரிகளுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துச் சென்றதாக ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.