தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தபிந்து கலக்டிவ் என்ற அமைப்பு இதன் காரணமாக ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலில் உள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களிடம் உணவை கொள்வனவு செய்வதற்கான பணம் கூட இல்லாதநிலை காணப்படுகின்றது என ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் பணியாற்றும் தபிந்து கலக்டிவ் அமைப்பின் சமிலா துசாரி தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டு;ள்ள ஆடைதொழிற்சாலை ஊழியர்களுக்கு உதவவிரும்புபவர்கள் கூட அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். சிலரிற்கு ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பூமிக்கு அடியில் புதிய அணு உலையை கட்டுகிறது ஈரான்
அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு மத்தியில் நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. அதன் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. அதன்படி இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிய அணு உலையை ...
Read More »சபாநாயகர் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு கையெடுத்திட்டார் – இன்று முதல் சட்டமாகிறது!
அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்டத்திற்கு சபா நாய கர் மஹிந்தா யாபா அபேவர்தன கையெழுத்திட்டார். அதன்படி, இன்று முதல் 20ஆவது திருத்தம் சட்டமாக மாறும் என்று நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்புத் துறை அறிவித்தது
Read More »களுத்துறையின் அனைத்து கிராமங்களும் முடக்கப்பட்டன
களுத்துறையின் அனைத்து கிராமங்களும் முடக்கப்பட்டுள்ளன. மத்துகம நியுகொலனியில் விதிக்கப்பட்டிருந்த கொரோன வைரஸ் ஊரடங்கினை நீக்கியுள்ள அதிகாரிகள் களுத்துறையின் ஏனைய பகுதிகள் அனைத்தையும் முடக்கியுள்ளனர்.
Read More »சிட்னி செல்லவிருந்த விமானத்திலிருந்து பெண் பயணிகளை இறக்கி உடல் பரிசோதனை!
தோஹா விமான நிலையத்தில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற தாயைத் தேடும் பொருட்டு, பெண் பயணிகளிடம் அத்துமீறி உடல் பரிசோதனை நடத்தியமைக்கு அந்நாட்டு அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த 2ஆம் திகதி தோஹா விமான நிலையக் கழிப்பறையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. இதையடுத்து, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் செல்லவிருந்த விமானத்திலிருந்து பெண் பயணிகளை இறக்கி, அவர்களில் யாருக்கேனும் அன்று குழந்தை பிறந்ததா என உடல் பரிசோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், கத்தார் பிரதமர் ...
Read More »கொவிட்-19: இவ் ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி தயாராகும் -ஃபைசர் நிறுவனம்
இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி வழங்கிட முடியும் என பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் (Pfizer) தெரிவித்துள்ளது. தற்போது நடந்துவரும் கிளினிகல் சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்து, அரசின் அனுமதியும் கிடைத்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் 4 கோடி தடுப்பூசி மருந்துகளை அமெரிக்காவில் விநியோகிக்க முடியும் என ஃபைசர் தலைமை செயற்பாட்டு அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த மாதம், தங்களது தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடப்பதாகவும், வரும் மார்ச் மாதத்திற்குள் 10 கோடிமருந்துகைள ...
Read More »இலங்கையில் 35,000 பேர் சுய தனிமைப்படுத்தலில்
இலங்கையில் தற்போது 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சமூகத்தில் தொற்றுநோய் விரைவாகப் பரவுவதால் பொது மக்கள் தீர்க்கமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக் கிறார்கள் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாட்டில் வைத்தியசாலையில் நோயாளர்கள் நிறைந்துள்ளதாக மகேந்திர பாலசூரிய மேலும் தெரிவித் துள்ளார்.
Read More »சீனா சிறிலங்காவுக்கு மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமின்மையையும் கொண்டுவந்துள்ளது
சீனா சிறிலங்காவுக்கு மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமின்மையையும் கொண்டுவந்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார். நாங்கள்மோசமான உடன்படிக்கைகளை இறைமை மீறல்களை கடலிலும் தரையிலும் சட்டமீறல்களை பார்க்கின்றோம்,என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ சீன கம்யுனிஸ்ட் கட்சி பிறரை வேட்டையாடும் தன்மை கொண்டது எனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் வித்தியாசமான வேறுவிதத்தில் வருகி;ன்றோம், நண்பர்களாக சகாக்களாக வருகின்றோம் எனவும் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
Read More »இராட்சத சுறாக்கள் உலாவுவதை அறியாமல் நீச்சலில் ஈடுபட்ட மக்கள்!
அவுஸ்திரேலியாவில் இராட்சத சுறாக்கள் அருகே உலாவுவதை அறியாமல், பிரம்மாண்ட மீன் திரளுக்கு நடுவே பொதுமக்கள் சிலர் நீச்சலடித்த வீடியோவொன்று வெளியாகியுள்ளது. சிட்னியிலுள்ள போண்டி கடற்கரையோரம், சால்மன் வகை மீன்கள் மிகப்பெரிய அளவில் திரண்டிருந்த நிலையில், அவற்றுடன் சிலர் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது மீன்களை உண்பதற்கான 2 சுறாக்களும் அந்த பகுதியில் உலாவியதை ட்ரோன் கெமரா படம் பிடித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடப்பாண்டில் மாத்திரம் இதுவரை 21 சுறா தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More »மாயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு!
தென்அமெரிக்காவில் 2 000 ஆண்டுகளுக்கு முன்னர் மாயன் நாகரிகத்தினர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் நீர் சுத்திகரிப்பு மையமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவாதமாலா நாட்டிலுள்ள மாயன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள், அவர்கள் பயன்படுத்தி நீர் சுத்திகரிப்பு முறையைக் கண்டுபிடித்துள்ளனர். அதில், கிறிஸ்டல் கற்கள், படிக மணல், சுண்ணாம்புக் கல் ஆகியவை கொண்டு நீர் சுத்திகரிப்பு செய்தது தெரியவந்தது. இம் முறை தற்போதைய காலத்திற்கும் ஏற்றவண்ணம் இருந்தது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read More »