தோஹா விமான நிலையத்தில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற தாயைத் தேடும் பொருட்டு, பெண் பயணிகளிடம் அத்துமீறி உடல் பரிசோதனை நடத்தியமைக்கு அந்நாட்டு அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.
கடந்த 2ஆம் திகதி தோஹா விமான நிலையக் கழிப்பறையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.
இதையடுத்து, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் செல்லவிருந்த விமானத்திலிருந்து பெண் பயணிகளை இறக்கி, அவர்களில் யாருக்கேனும் அன்று குழந்தை பிறந்ததா என உடல் பரிசோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், கத்தார் பிரதமர் ஷேக் காலித் வருத்தம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.