தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் உணவை கூட பெறமுடியாத அவலம்!

தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தபிந்து கலக்டிவ் என்ற அமைப்பு இதன் காரணமாக ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலில் உள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களிடம் உணவை கொள்வனவு செய்வதற்கான பணம் கூட இல்லாதநிலை காணப்படுகின்றது என ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் பணியாற்றும் தபிந்து கலக்டிவ் அமைப்பின் சமிலா துசாரி தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டு;ள்ள ஆடைதொழிற்சாலை ஊழியர்களுக்கு உதவவிரும்புபவர்கள் கூட அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சிலரிற்கு அவர்களது தொழிற்சாலைகள் உணவினை வழங்கியுள்ளன ஆனால் அவை போதுமானவையல்ல ஏயைவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நிலைமை இன்னமும் மோசமடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தாங்கள் தங்கியுள்ள வீடுகளிலேயே தங்களை சுயதனிமைப்படுத்தியுள்ளனர், இந்த வீடுகளில் இதுவரை பாதிக்கப்படாத வேலைக்கு நாளாந்தம் செல்பவர்களும் உள்ளனர் என தெரிவித்துள்ள தபிந்து கலக்டிவ் இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து அதிகம் என தெரிவித்துள்ளது.

சுயதனிமைப்படுத்தலிற்கு உட்பட்டவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் போது நாளாந்தம் 25 முதல் 30 நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர், என அவர் தெரிவித்துள்ளார்

ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தங்கியுள்ள வீடுகளில் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என பொதுசுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பதில்லை, கிராமசேவையாளர்கள் கூட செல்வதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.