மாயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு!

தென்அமெரிக்காவில் 2 000 ஆண்டுகளுக்கு முன்னர் மாயன் நாகரிகத்தினர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் நீர் சுத்திகரிப்பு மையமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

குவாதமாலா நாட்டிலுள்ள மாயன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள், அவர்கள் பயன்படுத்தி நீர் சுத்திகரிப்பு முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதில், கிறிஸ்டல் கற்கள், படிக மணல், சுண்ணாம்புக் கல் ஆகியவை கொண்டு நீர் சுத்திகரிப்பு செய்தது தெரியவந்தது. இம் முறை தற்போதைய காலத்திற்கும் ஏற்றவண்ணம் இருந்தது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.