கடந்த மாதம் 22ம் திகதி உக்கிரன் நாட்டில் அஸ்வின் உயிரிழந்து இருந்தார். அவரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சனிக்கிழமை மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. ஈழத்தை சேர்ந்த இளம் பத்திரிகையாளரும் காட்டூனிஸ்டுமான அஸ்வின் சுதர்சன் மேற்கு நாடு ஒன்றில் புகலிடம் அடையச் சென்ற வேளையிலேயே ஒவ்வாமை காரணமாக திடீர் மரணத்திற்கு உள்ளாகினார். யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாக் கொண்ட அஸ்வின் சுதர்சனம், சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தினக்குரல் பத்திரிகையில் காட்டூனிஸ்டாக பணிபுரிந்து தன்னுடைய கேலிச்சித்திரங்கள் மூலம் பலரது ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்கள்-29ம் ஆண்டு நினைவு நாள்
அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த படுகொலை. இந்தியப்படையின் துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தியொரு பணியாளர்களும், நோயாளார் விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தியேழு நோயாளர்களுமாக, மொத்தம் அறுபத்தியெட்டுப் பேர் கொல்லப்பட்டார்கள். 1987 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் நாள் நடாத்தப்பட்ட அந்தக் கோரப் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவு நாள் இன்று. ...
Read More »அப்பாவை விட அதிக தீரத்துடன் உங்களை எதிர்ப்பான்..உங்களால் தாக்கு பிடிக்க முடியாது ..உடனடியாக சுட்டுக் கொல்லுங்கள்- கருணா
இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் போன நேரம். அதாவது மே 16,17,18 இந்த மூன்று நாட்கள் தான் உக்கிரமாக நடந்தது. பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சரண் அடைய இருந்த போராளித் தலைவர்கள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப் பட்டனர். அப்போது தேசியத்தலைவர் பிரபாகரனின் மூத்த புதல்வர் சாள்ஸ் பயங்கர சித்திரவதை அனுபவித்து சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நாளில் தான் பாலகன் பாலச்சந்திரனும் பிடி பட்டுள்ளார். அவரை தங்கள் ராணுவ முகாமில் உட்காரவைத்து பிஸ்கட் கொடுத்து தண்ணீரும் ...
Read More »மக்கள் போராட்டமே அனைத்தையும் மாற்றியமைக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மக்கள் பலம் மட்டும் தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் சர்வதேசத்தின் நிலைப்பாட்டையும் மாற்றியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். நேற்று(18) பிற்பகல் இரண்டு மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போது புதிய அரசியலமைப்புக்கான நகல் வெளியிடப்படவுள்ள நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களில் முழுமையான அரசியலமைப்பு வெளியிடப்படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது. அந்த அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் ...
Read More »‘என்னை சுட்டுக்கொல்ல போகின்றீர்களா?’ -சுமந்திரன்
நேற்று (16) வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கு தெளிவுபடுத்த முற்றட்ட தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக தெளிவுபடுத்த முற்பட்டபோதே கடுமையான வாக்குவாதம் மக்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் இடம்பெற்றது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “முடியும் என்றால் பதிலளிப்போம் அதில் நாம் என்ன சொல்லப்போகின்றோம் என நீங்கள் சொல்லமுடியாது என்றும் சொல்லக்கூடிய கேள்விக்கு பதில்சொல்வோம் என்றும் கூறினார். மக்கள் கேள்விகளை கேட்டபோது அதனை தடுப்பதற்காகவும் தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அதில் கலந்துகொண்ட சுமந்திரன் சர்வதேச ...
Read More »ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
வடக்கு, கிழக்கில் உள்ள அணைத்து ஊடக அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர். ஊடகவியலாளர் நிமலராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு நாளில் நடாத்தப்படவுள்ள இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தினை யாழ்.ஊடக அமையம் ஏற்பாடு செய்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள்கள் தொடர்பில் உண்மை நிலையினை வெளிக் கொண்டுவரும் வகையில் சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதம் இன்றி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். சகல ஊடகவியலாளர்களும் தமது பணிகளை ...
Read More »வரிஏற்புச் செய்து பலகோடி பெறுமதியான வாகனக்கொள்வனவு
தீர்வை வரி இன்றி கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்த 66 பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்ரசுக் கட்சியின் தலைவரான சேனாதிராஜா உள்ளிட்ட உறுப்பிர்களே தீர்வை வரி இன்றி கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்தவர்களின் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர். இந்தப் பட்டியல் வெளியிடப்படும் முன்பதாக சில மாதங்களிற்கு முன்பதாக தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல வியாபாரியுமான ஒருவர் சுமார் 1750 ரூபாவினை மட்டும் வரிப்பணமாகச் ...
Read More »சிறீலங்கா அரசுக்குள் முரண்பாடுகள் பூதாகரமாக வெடித்துள்ளது
அரசுக்குள் முரண்பாடுகள் பூதாகரமாக வெடித்துள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன் தினம் நிகழ்த்திய உரையில் இருந்து இதனை மக்கள் மிகத் தெளிவாக புரிந்துகொண்டிருப்பார்கள் என, அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனை கூட்டு எதிர்க்கட்சினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த அரசு மீது தற்போது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
Read More »வட மாகாணத்தில் விரைவில் மேலும் 4 நியதிச் சட்டங்கள்
வட மாகாணத்தில் விரைவில் மேலும் 4 நியதிச் சட்டங்கள் நிறைவேறவுள்ளதாக வட மாகாண இறைவரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் வட மாகாணத்திற்குட்பட்ட கனிப் பொருட்களிற்கான வரிக்கான ஏற்பாடுகள் இடம்மெறுவதோடு அடகு பிடிப்போர் அனுமதிக்கான வரி விதிப்பிற்கும் வட மாகாண இறைவரித் திணைக்களம் தயாராகிவருகின்றதுடன் வியாபார பெயர்ப் பதிவுக் கட்டணம் என்பவற்றோடு மருந்து மற்றும் இரசாயன விநியோகம் மீதான வரிகளிற்கான ஏற்பாட்டினையும் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வரிகள் ஏற்கனவே நாட்டின் ஏனைய மாகாணங்கள் சில வற்றில் நடைமுறையில் உள்ளது இதன் பிரகாரம் விரைவில் ...
Read More »விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்கள்!!!
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 28 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை ...
Read More »