விக்டோரியாவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இந்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துக்களில் ஒன்றில் பெண்ணொருவரை காரினால் மோதிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச்சென்ற நபர் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Ardeer பகுதியில் Ballarat வீதியில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவத்தில் அந்தப்பெண் உயிரிழந்துள்ளார். இதேவேளை, Mount Eliza பகுதியில் வீதியில் எதிரே வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் யூட் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த ஓட்டுனரும் அவருடன் சென்றவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது அமெரிக்கா!
நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது.அமெரிக்காவின் கருவூலத்துறை உலகம் முழுக்க உள்ள சில முக்கிய ரூபாய்களை அந்நாட்டின் கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. அதன்படி எந்த நாட்டு ரூபாய்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டைச் சேர்ந்த ரூபாய்கள் மட்டுமே இந்த வரிசை பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கும். அந்த ரூபாயின் சர்வதேச மதிப்பு மற்றும் தாக்கத்தை வைத்து இந்த பட்டியலில் சேர்க்கப்படும். அந்த வகையில் சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் பணம் அமெரிக்காவின் இந்த ...
Read More »கன்னியா பிள்ளையார் ஆலயம் அகற்றப்பட்டமைக்கு இந்துக்குருமார் அமைப்பு கண்டனம்!
கன்னியா பகுதியில் பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு கண்டனத்தையும் மனவேதனையும் இந்துக்குரமார் அமைப்பு வெளியிட்டுள்ளது. இச்சம்வம் தொடர்பில் குறித்த அமைப்பின் தலைவர் கே.வி.கே.வைத்தீஸ்வரக்குருக்கள் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க’ என்னும் தத்துவத்திற்கு அமைவாக உலகவாழ் மக்கள் அனைவரும் தமது வாழ்வியலை நடத்திவருகின்றார்கள். எமது இலங்கை திருநாட்டில் இந்துக்களின் வழிபாட்டிடங்கள் சார்ந்து இலங்கை தொல்லியல் திணைக்களம் அண்ணளவாக எழுபதிற்கும் மேற்பட்ட பகுதிகளை அடையாளமிட்டு தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இவை எமது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த நிலையில் காணப்படுகின்றது. மிக ...
Read More »ஒரே தினத்தில் பெருநாளைக் கொண்டாட வேண்டும்!
நாட்டில் ஒரே தினத்தில் நோன்புப் பெருநாளைக் கொண்டாட வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோரை கருத்திற்கொண்டு வீண் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக்குழுச் செயலாளர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்குகின்றது. 1. கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ...
Read More »அவர் அழகானவர், வலிமையானவர்: அவுஸ்திரேலிய பெண்ணின் வித்தியாசமான கணவர்!
சமீபத்தில் திருமணமான அவுஸ்திரேலிய பெண் ஒருவர் தனது கணவர் அழகானவர், வலிமையானவர் என வர்ணிக்கிறார்… அந்த கணவர் யார் தெரியுமா? பிரான்சிலுள்ள ஒரு பாலம்தான் அவரது கணவர். ஆம்! பிரான்சிலுள்ள சாத்தானின் பாலம் என்று பொருள்படும் Le Pont du Diable என்ற பாலத்தைத்தான் அந்த பெண் திருமணம் செய்துள்ளார். சிட்னியைச் சேர்ந்த ஜோடி ரோஸ், தென் பிரான்சிலுள்ள Tech நதியின் மேல் அமைந்துள்ள பாலத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரான்சுக்கு சுற்றுலா செல்லும்போது 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த பாலத்தின்மீது ஜோடிக்கு காதல் ...
Read More »பிரேசில் நாட்டில் 4 சிறைகளில் கைதிகள் மோதல்- 40 பேர் பலி!
பிரேசில் நாட்டில் 4 சிறைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 40 கைதிகள் பலியாகினார்கள். பிரேசில் நாட்டில் அமேசோனாஸ் மாகாணத்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் உள்ளது. இதனால் அங்கு குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அங்குள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் நேற்று அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாயஸ்சில் உள்ள 4 சிறைகளில் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சிறைகள் அனைத்தும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. அதில் ஒரு சிறையில் மட்டும் ...
Read More »அவசரகால சட்டத்தை நீடிக்க அவசியமில்லை!
சிறிலங்காவிற்கு வருகை தருவதற்கு தமது நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விரைவில் நீக்குவதற்கு தேவையான தலையீட்டை செய்வதாக சர்வதேச நாடுகள் சிறிலங்கா ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளன. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜேர்மன், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்வாறு உறுதியளித்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாட் டின் பாதுகாப்பு நிலைமைகளை சர்வதேச தரப்பினருக்கு எடுத்துக்கூறும் வகையில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய இராச் சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜேர்மன், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ...
Read More »கைதான வைத்தியரை விசாரிக்க 6 பேர் அடங்கிய நிபுணர் குழு நியமனம்!
குருணாகல் வைத்தியர் தெடர்பில் விசாரணை செய்ய 6 பேர் அடங்கிய நிபுணர் குழு நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சசர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குருநாகல் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது வைத்தியர் சேகு சியாப்தீன் என்ற வைத்தியரே இவ்வாறே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »ஜப்பான் புதிய மன்னருடன் டிரம்ப் சந்திப்பு!
நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் வடகொரியா விவகாரம் மற்றும் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான இறக்குமதி வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக டிரம்ப் இன்று விரிவாக விவாதிக்கவுள்ளார். இதற்கிடையில், கடந்த முதல் தேதி ஜப்பானின் புதிய மன்னராக பதவியேற்ற நாருஹிட்டோவை டொனால்ட் டிரம்ப் இன்று சந்தித்தார். ...
Read More »யாருக்கும் அஞ்சி நான் எனது அமைச்சை துறக்கத் தயாரில்லை!
எந்தவித குற்றமும் செய்யாத என்னை பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயார் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்து என்னை நிரூபிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2014, 2015ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த காலங்களில் அரிசி இறக்குமதியில் செய்யப்பட்ட முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் விசாரணைகளுக்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவர் ...
Read More »