யாருக்கும் அஞ்சி நான் எனது அமைச்சை துறக்­கத் தயா­ரில்லை!

எந்­த­வித  குற்­றமும் செய்­யாத என்னை  பத­வி வில­கு­மாறு  கூறு­வதை ஏற்க நான் தயா­ரில்லை. எனக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்­கொள்ள நான் தயார் என அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளித்து என்னை நிரூபிப்பேன் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கடந்த 2014, 2015ஆம் ஆண்­டு­களில் அமைச்­ச­ராக இருந்த காலங்­களில் அரிசி இறக்­கு­ம­தியில் செய்­யப்­பட்ட முறைகேடுகள் குறித்த குற்­றச்­சாட்டில் நேற்று முன்­தினம் விசா­ர­ணை­க­ளுக்­காக  அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் நிதிக் குற்ற விசா­ரணை பிரி­வுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் அவர் மீதான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விட­யங்கள் குறித்து வின­வியபோதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் இது குறித்து  மேலும் கூறு­கையில்,

கடந்த 2014, 2015ஆம் ஆண்­டு­களில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் அரிசி இறக்­கு­மதி விட­யங்­களில் சில முறை­கே­டுகள் இடம்­பெற்­ற­தாக கூறியே அது குறித்து வாக்­கு­மூலம் ஒன்­றினை பெற்­றுக்­கொள்ள விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தேன். இது குறித்து நான் எனக்கு தெரிந்த அனைத்து விட­யங்­க­ளையும் முன்­வைத்­துள்ளேன்.

மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெறும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணை­க­ளுக்கு நான் தடை­யாக இருக்­கப்­போ­வ­தில்லை. ஊட­கங்கள் இன்று என்னை தவ­றான வகையில் சித்­த­ரிக்க முயற்­சித்து வரு­கின்­றன . என்­ மீது எந்த தவறும் இல்­லாத நிலையில் என்னை குற்­ற­வா­ளி­யாக காட்­டவே முயற்­சிக்­கின்­றனர். சிலர் என்னை பயங்­க­ர­வாதி என்றே கூறும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது.

இன்று எனக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்­றினை கொண்­டு­வந்­துள்­ளனர்.   நான் பதவி விலக வேண்டும் எனவும் இவர்கள் கூறு­கின்­றனர். நான் எந்த தவறும் செய்­யாத நேரத்தில் குற்­றச்­சாட்டை ஏற்க நான் தயா­ரில்லை. அதேபோல் இவர்­க­ளுக்கு அஞ்சி நான் எனது அமைச்சை துறக்­கவும் தயா­ரில்லை. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரட்டும் நான் அதற்கு முகங்­கொ­டுக்க தயா­ராக உள்ளேன். என்னால் எந்த குற்­றமும் இடம்­பெ­றாத நிலையில் நான் தைரி­ய­மாக  அதற்கு முகங்­கொ­டுக்க தயா­ராக உள்ளேன். அத்­துடன் இப்­போது பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதிலும் நான் சாட்­சி­ய­ம­ளிக்க தயா­ராக உள்ளேன். என்னை நியா­ய­மா­னவன் என நிரூ­பிக்க என்னால் முடியும்.

எதிர்க்­கட்­சி­யினர் முன்­வைக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்­துமே அடிப்­படை நியா­ய­மற்­ற­தா­கவே உள்­ளன. குறிப்­பாக நான் இரா­ணு­வத்­த­ள­ப­தியை தொடர்­பு­கொண்டு அழுத்தம் கொடுத்­த­தாக கூறு­வது முற்­றிலும் பொய்­யா­னது. அதனை இரா­ணு­வத்­த­ள­ப­தியே கூறி­யுள்ளார்.

மேலும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு நான் ஒரு­நாளும் துணை­போ­னவன் அல்ல. நான் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சி­யிலும் அமைச்­ச­ராக செயற்­பட்­டுள்ளேன். அப்போது என்னுடன் இணைந்து செயற்பட்ட நபர்கள் தான் இன்று தமது அரசியல் சுய லாபங்களை கருத்திற்கொண்டு எனக்கெதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர். யார் அழுத்தம் கொடுத்தா லும் என்மீது குற்றம் இல்லாத நிலையில் அனைத்து சவால்களையும் தைரியமாக முகங்கொடுக்க நான் தயார் என்றார்.