பிரேசில் நாட்டில் 4 சிறைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 40 கைதிகள் பலியாகினார்கள்.
பிரேசில் நாட்டில் அமேசோனாஸ் மாகாணத்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் உள்ளது. இதனால் அங்கு குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அங்குள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் நேற்று அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாயஸ்சில் உள்ள 4 சிறைகளில் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சிறைகள் அனைத்தும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

தாக்குதலுக்கு துப்பாக்கிகள் அல்லது கத்திகளை பயன்படுத்தவில்லை. சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகிலேயே அதிக கைதிகள் நிறைந்த சிறையாக பிரேசில் திகழ்கிறது. இங்கு மொத்தம் 3 லட்சத்து 68 ஆயிரத்து 49 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal