நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் வடகொரியா விவகாரம் மற்றும் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான இறக்குமதி வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக டிரம்ப் இன்று விரிவாக விவாதிக்கவுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டின் தேசிய கீதங்கள் இசைக்க மன்னரும் ராணி மசாக்கோவும் டிரம்ப்பை கை குலுக்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஜப்பான் அரசின் பிரசித்திபெற்ற அகாசாகா அரண்மனையில் இன்று பகல் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் முக்கிய ஆலோசனை நடத்தும் டிரம்ப் மன்னர் அளிக்கும் சிறப்பு விருந்தில் பங்கேற்கிறார்.
இந்த பயணத்தின் மூலம் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal