கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அரசாங்கம் மறைப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள எம்.பி ஹரின் பெர்ணான்டோ, நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த தொற்றுநோய் சூழ்நிலையில், மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு, ஓர் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது என்று தெரிவித்தார். நேற்று இரவு மாத்திரம், ராஜகிரிய, கம்பாஹா, குருநாகல் ஆகிய பகுதிகளில், 4 மரணங்கள் பதிவாகியிருந்தன என்றும் இது தொடர்பாக அறிவிக்கப்படவோ, இறந்தோரின் மொத்த எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கொரோனா தடுப்பூசி – தயார் நிலையில் இங்கிலாந்து
கொரோனா தடுப்பூசி டிசம்பர் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அதற்காக தயார்நிலையில் இருக்கும்படி இங்கிலாந்து சுகாதாரத்துறை செயளாலர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. ஆக்ஸ்போர்டு உள்பட பல்வேறு தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதி கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி நேற்று வெளியானது. அதில், இந்த தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா ...
Read More »கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதை முடிந்த வரை குறைத்துக்கொள்ளுங்கள்!
கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதை முடிந்த வரை குறைத்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர ஏனைய விடயங் களுக்காகக் கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்ட போதிலும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களைத் தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மீறி நடந்தால் கொரோனா தொற்றாளர்களைத் தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மிகவும் ஆபத்தான ...
Read More »கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியது
இலங்கையில மேலும் 510 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்றைய தினம் மேலும் 510 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரம் 929ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 10 ...
Read More »ஜெருசலேமுக்கு வாங்க வேலை தருகிறோம்- டிரம்புக்கு அழைப்பு
டிரம்ப் அவர்களே நீங்கள் அதிபர் பதவியை இழந்துவிட்டதால் வேலை இல்லையே என்று கஷ்டப்பட வேண்டாம். நீங்கள் ஜெருசலேமுக்கு வாருங்கள் உங்களுக்கு நல்ல பொருத்தமான வேலை தருகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர். அதிபர் தேர்தலில் தோல்வியுற்றுள்ள டொனால்டு டிரம்பை கிண்டல் அடிக்கும் வகையில் பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலேம் நகர சபை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், டொனால் டிரம்ப் அவர்களே நீங்கள் அதிபர் பதவியை இழந்துவிட்டதால் வேலை இல்லையே என்று கஷ்டப்படவேண்டாம். நீங்கள் இங்கு வாருங்கள் எங்கள் நகர சபையில் உங்களுக்கு நல்ல பொருத்தமான வேலை ...
Read More »ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது!-ஜோ பைடன் வெற்றி உரை
ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றினார் ஜோ பைடன். அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. 284 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் வெற்றிக்குத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது. அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது. என்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். ...
Read More »டெங்கும், கொரோனாவும் வந்த நோயாளி முதன்முறையாக இனங்காணப்பட்டார்
நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றும், டெங்குக் காய்ச்சலும் இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. 29 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்குக், டெங்குக் காய்ச்சலும் இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் டெங்கு விசேட சிகிச்சை மத்திய நிலையத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
Read More »தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பில் இந்தியா அக்கறையாகவுள்ளதாம்! -மாவை
தமிழினத்தின் விடுதலைக்கு, தமிழ்த் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கறையைச் செலுத்தியுள்ளதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு; “கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரசியல், இராஜதந்திர நகர்வுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. சீனாவின் தலையீடுகள், அதற்கு எதிரான நாடுகளின் தலையீடுகள், இந்தியாவின் உரித்து, இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பில் தங்கியுள்ளது என்பதில் ...
Read More »பிரேஸிலில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட நபர்!
பிரேஸிலில் மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இளைஞரொருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட விசித்திர சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பஹியாவைச் சேர்ந்த டியோகோ ரபேலோ(Diogo Rabelo )என்பவருக்கும் விட்டர் புவெனோ (Vitor Bueno) என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் டியோகோ மற்றும் ரபேலோ ஆகிய இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இத் திருமணத்தை ரபேலோ ரத்து செய்ய முடிவெடுத்து அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த டியோகோ மனதை தேற்றிக் கொண்டு பஹியாவிலுள்ள ஒரு ...
Read More »சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர் மரணம்
வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக மீரிகம சுகாதார வைத்தியர் தெரிவித்துள்ளார். மீரிகம – பல்லேவெல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சுய தனிமைப்படுத்தப்பட்ட 68 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்து விட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாதுபிட்டிவல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து இப்பகுதியில் உள்ள சில வீடுகளில் வசிப்பவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர். ...
Read More »