பிரேஸிலில் மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இளைஞரொருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட விசித்திர சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
பஹியாவைச் சேர்ந்த டியோகோ ரபேலோ(Diogo Rabelo )என்பவருக்கும் விட்டர் புவெனோ (Vitor Bueno) என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் டியோகோ மற்றும் ரபேலோ ஆகிய இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இத் திருமணத்தை ரபேலோ ரத்து செய்ய முடிவெடுத்து அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த டியோகோ மனதை தேற்றிக் கொண்டு பஹியாவிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து வெளியான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal