அமெரிக்க அரசாங்கத்துடன் கைச்சாத்திட தீர்மானித்துள்ள மிலேனியம் சாவல்கள் ஒப்பந்தத்திற்கு (Millennium Challenge Cooperation – MCC) எதிராக தேரர் ஒருவர் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார். வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப என்ற தேரர் ஒருவரே இவ்வாறு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கூட்டமைப்பு என்ன கோரிக்கை முன்வைத்தாலும் ஐ.தே.க தலை சாய்க்கும்!
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்கின்றமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலை சாய்க்கும் என்று எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானித்தாலும் கூட இம்முறை தேர்தலில் அது நடக்காது. பெரும்பான்மை வாக்குகளில் கோத்தாபாய ராஜபக் ஷ வெற்றி பெறுவார். ஆனாலும் இதில் கிறிஸ்தவ மக்களின் முழுமையான வாக்குகள் கோத்தாபய ராஜபக் ஷவிற்கு ...
Read More »சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சமையல் சாதனம் !
விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு உணவுப்பொருட்கள் தயாரித்து சாப்பிடுவதற்கான அதிநவீன சமையல் சாதனத்தை சைக்னஸ் என்ற விண்கலத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றன. இந்த விண்வெளி நிலையத்தில் வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணியை கவனிக்கின்றனர். அவர்கள் பிஸ்கெட், சாக்லேட் போன்ற உணவுப்பொருட்கள் தயாரித்து சாப்பிடுவதற்கான மாவு, ‘மைக்ரோவேவ் அவன்’ (அதிநவீன சமையல் சாதனம்) ஆகியவை அமெரிக்காவின் வெர்ஜீனியா வாலப்ஸ் தீவில் இருந்து சைக்னஸ் என்ற விண்கலத்தின் மூலம் ...
Read More »இந்தியாவின் புதிய வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைப்பு!
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இந்தியா வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடனும் கில்கிட்-பல்டிஸ்தான் லடாக்குடனும் இணைக்கப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் கதுவா, ஜம்மு, உதம்பூர், ரேசாய், அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முசாபர்பாத், லே மற்றும் லடாக், கில்கிட், கில்கிட் வசாரத், சில்ஹாஸ் மற்றும் பழங்குடியினர் பகுதி என மொத்தம் 14 மாவட்டங்கள் இருந்தன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும், மாநில ...
Read More »ரெலோவிலிருந்து விலகினார் சிவாஜிலிங்கம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக பதவி வகித்து வந்த சிவாஜிலிங்கம் தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந் நிலையில் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனையடுத்து தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இதற்கமைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக கட்சியின் செயலாளர் நாயகமான சட்டத்தரணி என். சிறிகாந்தாவிடம் இன்று காலை நேரடியாக கடிதமொன்றையும் கையளித்துள்ளார்.
Read More »முஸ்லிம்களை பயமுறுத்தி வாக்குக் கேட்கின்றார்கள்!
ஜனாதிபதி தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ச அணியினர் முஸ்லிம்களை பயமுறுத்தி வாக்கு கேட்கின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஜானாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை (1) வாழைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், முஸ்லிம் பகுதிகளுக்குச் சென்று இல்லாதபொல்லாத பொய்களைச் சொல்லியும், அச்சமூட்டியும் கோத்தாவை வெல்ல வைக்க வாக்குக் கேட்டுத் திரிவதை காணமுடிகின்றது. ...
Read More »சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள்!
இந்து கோயில்களுக்குள் பௌத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள் எனத் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார். நேற்று வவுனியாவில் காணாமல் போன உறவுகள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் 986 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நேற்றைய தினம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எமது போராட்ட களத்திற்கு வந்திருந்தார்கள். தமிழ் மக்களை மீன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி நாங்கள் கூறுகின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ...
Read More »சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன்!
ஜனாதிபதி செயலகம் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்றரை மணித்தியாலம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் சனிக்கிழமை(2) முற்பகல் கல்முனையில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரது கேள்விக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தனது கருத்தில், 90% வீதம் காணி விடுவிக்கப்பட்டுள்ளது என கதைவிட்டுக்கொண்டிருக்க தேவை இல்லை.98 அரசியல் ...
Read More »ராஜபக்ஷ குடும்பத்தினர் வெற்றி பெறுவதற்காக சஹ்ரான் வெடித்தார்!
சிறுபான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டு இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி வரமுடியாது எனும் உண்மையை இந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொல்லி அவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு (01) வாழைச்சேனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், இந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ ...
Read More »ஆஸ்திரேலியாவில் கார்களில், சமையலறைகளில் உறங்கும் அகதிகள்!
ஆஸ்திரேலியாவில் அகதிகளாக உள்ளவர்கள் மிகவும் நெருக்கமான தங்குமிடங்களில், கார்களில், ஹோட்டல் சமையலறைகளில் இரவில் தூங்க வேண்டிய வீடற்ற அவலநிலை இருந்து வருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், முறையான மீள்குடியேற்ற வசதிகள் இல்லாததால் இந்த வீடற்ற நிலை அகதிகளிடையே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக 24 இளம் அகதிகளை பின் தொடர்ந்த ஆய்வாளர் டாக்டர் ஜென் கெளச், இந்த காலக்கட்டத்தில் அகதிகள் பல மோசமான, பாதுகாப்பற்ற, தற்காலிக இடங்களில் தூங்கியதைக் கண்டறிந்துள்ளார். சிலர் பள்ளியிலோ பணியிடங்களிலோ தங்கியுள்ளனர், ...
Read More »