அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரத்தில் வானம், ஆரஞ்சும் கறுப்பும் கலந்த வண்ணத்தில் காணப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் டாஸ்மேனியா தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் புகைப் படலம் ஹோபார்ட் நகரத்தைச் சூழ்ந்தது. காட்டுத்தீ ஏற்பட்ட இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் ஹோபார்ட் அமைந்துள்ளது. எனினும் தீயின் புகை பரவி ஹோபார்ட்டையும் பாதித்தது. ஹோபார்ட் நகரவாசிகள், வானத்தைப் படமெடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர். காட்டுத்தீ, ஹோபார்ட் நகரத்திற்குப் பரவாது என்றாலும் மூச்சுத்திணறல் நோய்களுடையவர்கள் புகையால் பாதிப்படையலாம் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர். தீயின் காரணமாக யாருக்கும் காயங்கள் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருமா?
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதாக்கள் நிறைவேறின. இதன் மூலம் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். இதற்காக அவர் உள்நாட்டு நிதியில் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று, அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறார். ஆனால் மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது, அதோடு அந்த திட்டத்தையே ரத்து செய்ய ...
Read More »ஐக்கிய தேசிய கட்சியை அழிப்பதற்கு சந்திரிக்கா முயற்சி!-ரவி
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகின்ற போதிலும் அதனை குழப்பும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க , சுதந்திர கட்சியை அழித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது ஐக்கிய தேசிய கட்சியையும் அழிப்பதற்கு முற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். சிங்கள மொழி வார இதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Read More »ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரிக்கை!
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக காணி உரித்து நிர்ணய திணைக்களம் சார்பாக, மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மூன்று மாத கால அவகாசத்தினை கோரியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்காக மேலும் தெரிய வருகையில்,, கடந்த 2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு காணி நிர்வாக திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்படும் 13 வருடங்கள் ஆகியும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணி வழங்கப்படவில்லை என்பதன் அடிப்படையில் மன்னார் மாவட்டம் ...
Read More »அனைத்து மாகாணங்களுக்கும் ஆளுநர்கள் நியமனம்!
தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய மாஷல் பெரேரா, வட மாகாணத்திற்கும், அசாத் சாலி கிழக்கு மாகாணத்திற்கும் நியமனம் பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நியமனம் பெறவுள்ள மாஷல் பெரேரா, டிலான் பெரேராவின் தந்தையென்பதுவும் குறிப்பிடதக்கது. இதேவேளை, கடந்த டிசம்பர் 31ஆம் நாளுடன் சகல ஆளு நர்களையும் ராஜினாமா செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Read More »பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதை இந்தியா தாமதிப்பது ஏன்?
பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதியை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும் வழங்கவில்லை என இந்தியாவின் விமானப்போக்குவரத்திற்கான இராஜாங்க அமைச்சர் ஜயந் சின்ஹா தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பி;ட்டுள்ளார் இந்திய விமானநிலைய அதிகாரசபை வெளிநாடுகளில் விமானநிலைய நிர்மாணிக்க விரும்புகின்றது எனினும் பலாலி தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும் அனுமதிவழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார் பலாலியில் விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்ட அறிக்கையொன்றை தயாரிப்பது தொடர்பில் இந்திய விமானநிலைய அதிகாரசபை இந்திய வெளிவிவகார அமைச்சுடன் உடன்படிக்கையொன்றை செய்துகொண்டுள்ள போதிலும் வெளிவிவகார ...
Read More »எதிரிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது!-டிரம்ப்
பாகிஸ்தானுடன் நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை என்றும், எதிரிகளுக்கு அந்தநாடு அடைக்கலம் தருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது. ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானை வெளிப்படையாக கண்டித்த ஜனாதிபதி டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கோடி கணக்கிலான நிதி ...
Read More »ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த அகதிகளின் குழந்தைகள் வெளியேற்றம்!
நவுருத்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த அகதிகளின் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முறையான மருத்துவமின்றி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் குடும்பங்களுடன் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸூக்கு முன்னதாக மூன்று குடும்பங்களையும் அவர்களது குழந்தைகளையும் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நவுரு தடுப்பு முகாமில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஏழாக குறைந்துள்ளது. இதில் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படும் நான்கு குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். நவுருத்தீவில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகள் முறையான மருத்துவ சிகிச்சையின்றி தவிப்பதாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு ஒன்று ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங் தேர்வு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை வசப்படுத்தி விடலாம். மேலும் 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்கும் வேட்கையுடன் விராட் கோலி தலைமையில் களமிறங்கி உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும் களமிறங்கி உள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி ...
Read More »நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்!
நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலத்தை, கரடுமுரடான பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது. நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி, அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதற்காக சீன விண்வெளி ஆய்வு மையம், சாங் இ (Chang’e Program) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது ‘சாங் இ ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			