அவுஸ்திரேலியாவில் திடீரென கறுப்பு நிறமாக மாறிய வானம்!

அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரத்தில் வானம், ஆரஞ்சும் கறுப்பும் கலந்த வண்ணத்தில் காணப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் டாஸ்மேனியா தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் புகைப் படலம் ஹோபார்ட் நகரத்தைச் சூழ்ந்தது.

காட்டுத்தீ ஏற்பட்ட இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் ஹோபார்ட் அமைந்துள்ளது. எனினும் தீயின் புகை பரவி ஹோபார்ட்டையும் பாதித்தது.

ஹோபார்ட் நகரவாசிகள், வானத்தைப் படமெடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர்.

காட்டுத்தீ, ஹோபார்ட் நகரத்திற்குப் பரவாது என்றாலும் மூச்சுத்திணறல் நோய்களுடையவர்கள் புகையால் பாதிப்படையலாம் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

View image on Twitter
தீயின் காரணமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. எனினும், அருகில் வசிக்கும் சமூகங்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்திலிருந்து பற்றி எரியும் தீயால் இதுவரை 8,000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலம் சேதமடைந்திருப்பதாகக் கூறப்பட்டது.