பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதியை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும் வழங்கவில்லை என இந்தியாவின் விமானப்போக்குவரத்திற்கான இராஜாங்க அமைச்சர் ஜயந் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பி;ட்டுள்ளார்
இந்திய விமானநிலைய அதிகாரசபை வெளிநாடுகளில் விமானநிலைய நிர்மாணிக்க விரும்புகின்றது எனினும் பலாலி தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும் அனுமதிவழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்
பலாலியில் விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்ட அறிக்கையொன்றை தயாரிப்பது தொடர்பில் இந்திய விமானநிலைய அதிகாரசபை இந்திய வெளிவிவகார அமைச்சுடன் உடன்படிக்கையொன்றை செய்துகொண்டுள்ள போதிலும் வெளிவிவகார அமைச்சு இன்னமும் அனுமதியை வழங்கவில்லை என இந்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்
பலாலி விமானநிலையத்திற்காக திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான அனுமதியை இன்னமும் வெளிவிவகார அமைச்சு வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அடுத்த சில மாதங்களில் பலாலி தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெறஉள்ளதாக இந்திய விமானநிலைய அதிகாரசபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாகவே இந்திய வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய இலங்கைக்கு இடையிலான அரசியல் உறவுகள் இன்னமும் பலவீனமாக உள்ளன எதிர்வரும் நாட்களில் அவை பலப்படும் என எதிர்பார்க்கின்றோம் நிச்சயமாக வெளிவிவகார அமைச்சு அனுமதியை வழங்கும் எனவும் அந்த அதிகாரி தெரிவி;த்துள்ளார்