காலக்கிரமத்தில் இதுபோன்று பலவற்றுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் ராஜபக்ஷவினரின் அரசுக்கு எச்சரிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் இதுகால வரையிலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்பட்ட விளைவுகளில் ; ஒன்றாகவே அமெரிக்க காங்கிரஸால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் தெரிவித்துள்ளனர் 2009 மே ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பேராசிரியர் காவல் துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டார்
கொவிட் -எக்பிரஸ் பேர்ள் கப்பல் குறித்து கருத்து தெரிவிப்பவர்களை மௌனமாக்க அரசாங்கம் முயல்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார். இரு துன்பியல் நிகழ்வுகள் தொடர்பிலும் அரசாங்கம் உண்மையை மறைக்க முயல்கின்றது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். கப்பல் தொடர்பான விபரங்களை இன்டர்போல் வெளியிட்டவேளை மூன்று நாடுகள் தங்கள் கடற்பகுதிக்குள் கப்பலை அனுமதிக்கவில்லை என்பது தெரியவந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். பேராசிரியர் விஜயகுணவர்த்தன இதனை தெரிவித்தார்.இது செய்தியில் வெளியானதும் பேராசிரியர் சிறிலங்கா காவல் ...
Read More »சந்திரன் விதுஷன் மரணம் குறித்து உண்மைகள் கண்டறிப்பட வேண்டும் !
பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ள மட்டக்களப்பு, இருதயபுரத்தைச் சேர்ந்த சந்திரன் விதுஷனின் குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இச்சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். பொலிஸார் எனக்கூறி மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்குப்பகுதி வீடொன்றிலிருந்து கடந்த புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் அழைத்துச்செல்லப்பட்ட சந்திரன் விதுஷன் (22 வயது) இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தமிழத்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அந்த இளைஞனின் இல்லத்திற்கு நேற்று ...
Read More »மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் பாடசாலைகள்
மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்வதற்கு என நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இந்த வேலைத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நுகெகோட, விஜயராம கல்லூரி ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் பாடசாலையாக மேம்படுத்தப்படவுள்ளன. சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லும் பல மாணவர்கள் மாதாந்த கட்டணத்தை ...
Read More »கொள்கலன் ஒன்றில் ; கசிவு காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது
கட்டாரின் துறைமுகமொன்றி;ல் கப்பல் காணப்பட்டவேளை கொள்கலன் ஒன்றில் கசிவு காணப்படுவது குறித்து தெரியவந்தது என எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை இயகக்கிய எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்மல் யாட்ஸ்கவிட்ஸ் தெரிவித்துள்ளார். கப்பலில் மாலுமிகளிற்கு நைட்ரிக் அசிட் கசிவது குறித்து தெரிந்திருந்தது என தெரிவித்துள்ள அவர் குறிப்பிட்ட கொள்கலன்களை இறக்குவதற்கு இந்திய கட்டார் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார் சனல்நியுஸ் ஏசியாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கப்பல் பயணித்த பாதை குறித்து தெளிவுபடுத்தியுள்ள அவர் கொள்கலன்கள் பத்தாம் திகதி ...
Read More »உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் – பிரெட் லீ
இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட்-சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்-லீ அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து என இரு அணிகளும் சரிசம வாய்ப்பில் உள்ளன. என்றாலும் இங்கிலாந்து ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை (வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது) ஏறக்குறைய நியூசிலாந்தில் உள்ளது போன்றே இருக்கும். அதாவது பந்து நன்கு வேகத்துடன் ஸ்விங்கும் ஆகும். இவை எல்லாம் ...
Read More »50,000 கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா?
வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கொவிட் தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக? என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஐம்பதாயிரம் கொவிட் தடுப்பூசிகளும் அரசாங்கத்தின் அறிவிப்பு ஆரம்பத்தில் வட மாகாண மக்களுக்கென தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு செலுத்தி முடிக்கப்பட்டது. யாழ் மாவட்ட மக்களிடம் கொவிட் தொற்றின் பரவல் காணப்படுவது போலவே வன்னியிலும் தீவிர பரவல் காணப்படுகின்றது. ...
Read More »அஸ்ட்ராசெனிகா என்ற பெயரில் போலியான தடுப்பூசிகள் வழங்கப்படலாம்..!
ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளாது, வியாபாரிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். வியாபாரிகளிடம் பெற்றுக்கொள்ளும் தடுப்பூசிகளில் போலியான தடுப்பூசிகளை கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தொற்றுநோய்கள் குறித்த நிபுணரும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னாள் ஆலோசகருமான விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார். நாட்டில் ஆறு இலட்சம் பேருக்கு ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதையடுத்து, தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சி குறித்தும், வியாபாரிகளினூடாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள எடுக்கும் ...
Read More »சீனாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டி உள்ளது. அங்கு குவாங்டாங் மாகாணத்தில் புதிதாக 10 பேருக்கு உள்நாட்டில் பரவும் கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேறு முக்கிய நகரங்களில் 14 ...
Read More »மெல்பன் நகரின் முடக்க நிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு
விக்டோரியாவில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மெல்பனுக்கான முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படவுள்ளதாக acting premier James Merlino அறிவித்துள்ளார். புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள எவரும் முதியோர் பராமரிப்பு இல்லங்களைச் சேர்ந்தவர்கள் அல்லவென தெரிவிக்கப்படுகிறது. Highlights விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மெல்பன் பெருநகரப்பகுதி முழுவதும் முடக்கநிலை மேலதிகமாக ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுகிறது. மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றது. அதேநேரம் ...
Read More »