கொவிட் -எக்பிரஸ் பேர்ள் கப்பல் குறித்து கருத்து தெரிவிப்பவர்களை மௌனமாக்க அரசாங்கம் முயல்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
இரு துன்பியல் நிகழ்வுகள் தொடர்பிலும் அரசாங்கம் உண்மையை மறைக்க முயல்கின்றது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கப்பல் தொடர்பான விபரங்களை இன்டர்போல் வெளியிட்டவேளை மூன்று நாடுகள் தங்கள் கடற்பகுதிக்குள் கப்பலை அனுமதிக்கவில்லை என்பது தெரியவந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் விஜயகுணவர்த்தன இதனை தெரிவித்தார்.இது செய்தியில் வெளியானதும் பேராசிரியர் சிறிலங்கா காவல் துறை விசாரணைக்காக அழைக்கப்பட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி குறித்து கருத்து தெரிவிப்பவர்களை மௌனமாக்குவதன் மூலமே அரசாங்கம் பிரச்சினைகளை கையாள்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தனது அமைச்சின் பணியாளர்களை ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கவேண்டாம் என கோரும் சுற்றுநிரூபமொன்றை அனுப்பிவைத்துள்ளார்
உ ங்களுக்கு மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால் ஏன் ஊடகங்களுடன் பேசக்கூடாது நாடு ஆபத்தான திசையில் பயணிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்