மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய்வதற்கு என நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இந்த வேலைத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நுகெகோட, விஜயராம கல்லூரி ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் பாடசாலையாக மேம்படுத்தப்படவுள்ளன.
சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லும் பல மாணவர்கள் மாதாந்த கட்டணத்தை செலுத்த முடியாமல் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்ற தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal