ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவாவை ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியதும் இருவரும் பொறுப்பாக ஆடினர். முதல் செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர். இறுதியில், முதல் செட்டை 7-6 (2) என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வளி மண்டலத்தில் கரியமில வாயு: 2019-ல் உச்சத்துக்குப் போகும்!
முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் (கரியமில வாயு) அளவு இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரிட்டனின் வானிலை மைய ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கரியமில வாயுவை ஆக்ஸிஜனாக மாற்றும் காடுகளின் பரப்பளவு ஒவ்வொரு வருடமும் குறைந்து வரும் அதே வேளையில், மனிதர்களின் செயல்பாடுகளால் வெளியாகும் கரியமிலவாயு அளவும் அதிகரித்து வருகிறது. அதே வேளையில், சமீபத்திய ஆண்டுகளில் வெப்பமண்டல பசிபிக் பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், அங்கு மரங்கள், செடிகளின் வளர்ச்சி அளவு குறைந்து கரியமிலவாயு உறிஞ்சப்படுவதும் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, ...
Read More »சம்பள உயர்வைக் கோரி சத்தியாகிரகப் போராட்டம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வைக் வழங்கக் கோரி, டிக்கோயா – சலங்கந்தை பகுதியை சேர்ந்த சிவனு கணேசன் என்பவர், அட்டன் – மல்லியப்பு சந்தியில், இன்று சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பாராமுகமாக செயற்படாமல் உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், கொழும்பில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்துமே, குறித்த நபர் மேற்படி சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அண்மைக்காலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைக் கோரி பல்வேறு ...
Read More »மஹிந்தவுக்கு தென் மாகாணத்திலும் மாத்திரம் தான் ஆதரவு!
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தென் மாகாணத்தில் மாத்திரமே ஆதரவு காணப்படுகின்றது. எனினும் மேல், மத்திய மற்றும் ஊவா உள்ளிட்ட மாகாணங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கே பெரும்பாண்மை காணப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலானாலும் அதில் வெற்றி பெறுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக அமையாது என தெரிவித்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read More »2 மாதங்களில் டிரம்ப், கிம் ஜாங் அன் சந்திப்பு!
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவருக்கும் இடையேயான 2-வது சந்திப்பு அடுத்த மாதம் இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. இதனிடையே மீண்டும் ...
Read More »தமிழிலேயே கேள்வி கேட்கலாம்; பதில் சொல்லலாம்!
சர்வதேச அளவில் பயனர்களே கேள்வி கேட்டு, பயனர்களே பதில்கள் கூறும் இணையதளம் ‘கோரா’ (Quora). முதன்முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இது, பயனாளர்களின் வரவேற்பு காரணமாக இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் உட்பட 16 மொழிகளில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது பதினேழாவதாக தமிழில் ‘கோரா’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ”அறிவைப் பகிர்வதற்கும் உலகை நன்கு அறிவதற்குமான ஓர் உயரிய இடம்” என்று கோரா தமிழ் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் நீங்கள் என்ன வகையான கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம், பதில் அளிக்கலாம். ஒரே கேள்விக்கு எத்தனை பேர் வேண்டுமானாலும் பதில் கூறலாம். இந்நிலையில் ...
Read More »ஜெயலலிதா மரணத்துக்கும், கொடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு!
ஜெயலலிதாவின் மரணத்துக்கும் கொடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட மக்களும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்காகத்தான் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் போராடி வெற்றி கண்டனர். ஆனால் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10 சதவீதம் ...
Read More »48 பந்தில் சதம் விளாசிய சிட்னி தண்டர் வீரர்!
பிக் பாஷ் டி20 லீக் தொடரில சிட்னி தண்டர் அணியைச் சேர்ந்த பெர்குசன் 48 பந்தில் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பெர்த் ஸ்கார்சர்ஸ் – சிட்னி தண்டர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் தொடக்க பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் அதிரடியால் (55 பந்தில் 96 ரன்கள்) ...
Read More »முன்னாள் முதலமைச்சருடன் ஃபேர்கஸ் ஒளல்டின் சந்திப்பு!
பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஃபேர்கஸ் ஒளல்ட் மற்றும் இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன் ஆகியோர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை நேற்று (24) காலை நீதியரசரின் வாசஸ்தலத்தில் சந்தித்துள்ளனர். இதன் போது சில முக்கியமான அடிப்படை விடயங்களைப் பெற்றுத் தருவதாக மக்களிடம் கூறி வாக்குப் பெற்று விட்டு அவை சம்பந்தமாக அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாற்றம் செய்யாது மிகவும் குறைந்த அளவு சில உரிமைகளைப் பெற இன்றைய தமிழ்த் தலைவர்கள் முயன்றுள்ளதால் அதை மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய ...
Read More »சம்பந்தனை சந்தித்த அவுஸ்திரேலிய, ஜப்பான் தூதுவர்கள்!
சிறிலங்காவிற்கான ஜப்பான் தூதுவர் மற்றும் தனது சேவை காலத்தை நிறைவு செய்யவுள்ள அவுஸ்திரேலிய தூதுவர் ஆகியோர் நேற்று(24) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர் சிறிலங்காவிற்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியமா மற்றும் அவுஸ்திரேலிய தூதுவராக கடமையாற்றி தனது சேவை காலத்தை நிறைவு செய்யவுள்ள பிரைஸ் ஹட்ச்ஸ்ன் ஆகிய இருவருமே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்
Read More »