போர் முடிந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கோத்தபாய களமிறங்கினால் போட்டியாளராக பொன்சேகா!
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்லக்கூடிய முழுத் தகுதியும் சகல வல்லமையும் முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே உண்டு. எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சரத் பொன்சேகாவைக் களமிறக்கவேண்டும்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் சிறிலங்கா பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர் அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள். ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...
Read More »கரன்னாகொட, ரோஷான் குணதிலக்கவுக்கு பதவி உயர்வு!
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் விமானப்படைத் தளபதியான ஏர் சீஃப் மார்ஷல் ரோஷான் குணதிலக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அட்மிரல் வசந்த கரன்னகொட 2005 முதல் 2009 வரை கடற்படைத் தளபதியாகவும், ஏர் சீஃப் மார்ஷல் ரோஷான் குணதிலக்க 2006 முதல் 2011 வரை விமானப்படைத் தளபதியாகவும் பணியாற்றினார். பதவி உயர்வு தொடர்பான கூடுதல் வர்த்தமானி அறிவிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
Read More »தாஜுதீன் கொலைக்கான ஆதராங்களை மறைத்த அதிகாரிக்கு எதிராக குற்றப்பதிவு!
முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக சட்டமா அதிபர், கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்துள்ளார். றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலைக்கான ஆதராங்களை மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக சட்டமா அதிபர் இவ்வாறு குற்றச்சாட்டை தாக்கல் செய்துள்ளார்.
Read More »இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலமானார்!
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது. உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இந்திரா காந்திக்குப் பிறகு இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ் ஆவார். அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், “நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்” என்று காஷ்மீர் ...
Read More »அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனையை எதிர்நோக்கும் கணேசமூர்த்தி தியாகராஜா!!
அவுஸ்திரேலியாவில் தனது நண்பர் ஒருவரை படுகொலை செய்த இலங்கைத்தமிழர் ஒருவர் சிறைத்தண்டனையை எதிர்நோக்கின்றார் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் அகதியாக தஞ்சமடைந்த கணேசமூர்த்தி தியாகராஜா என்பவரிற்கே சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அடிலெய்டில் உள்ள பென்பீல்ட் கார்டன் வீட்டில் தனது நண்பரான முகமட் மன்சூரை இவர் படுகொலை செய்தார் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இம்மாத இறுதியில் நீதிமன்றம் இவரிற்கான தண்டனையை அறிவிக்கவுள்ளது. மன்சூர் தனது நண்பராக விளங்கவேண்டிய ஒருவரால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார் என ...
Read More »இணைந்து பணியாற்றுவதன் மூலமே நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும்!
அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே வடமாகாண நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்று வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.+ வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், குடிநீர் தேவை என்பது வடமாகாணத்திற்கு எவ்வளவு சவாலானதாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கிணங்க பல்வேறு வேலைதிட்டங்களை நாம் முன்னெடுத்து கொண்டிருக்கிறோம். எனவே அதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. வடமாகாணத்தின் ...
Read More »ஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை!
கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம் கொழும்பில் இன்று(06) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர். விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தேடப்படும் ஒருவர் புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு ஊடகவியலாளர் நிபோஜனிடம் உரையாடியது தொடர்பிலேயே அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் பயன்படுத்தும் தொலைபேசி சிம் அட்டை அவருடைய தந்தையின் பெயரில் உள்ளமையால் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக இன்று(06) கொழும்பு ஒன்றில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பாணை ...
Read More »நியூசிலாந்தில் கருக்கலைப்பு சட்டபூர்வமாகிறது!
நியூசிலாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கர்ப்பம் தரித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் அவர் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். அதுவும் அந்த பெண்ணை 2 மருத்துவர்கள் பரிசோதித்து அவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்த கடுமையான சட்டத்தை நீக்க வேண்டும் எனவும், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாகாது என்பதை ...
Read More »கனடாவில் நகரின் தலைமை காவலராக தமிழர் நியமனம்!
கனடா நாட்டின் ஒன்டாரியோ பகுதியில் உள்ள முக்கிய நகருக்கு தலைமை காவலராக இலங்கை தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டின் ஹால்டன் பகுதியில் துணை காவலராக பணிபுரிந்தவர் நிஷ் துரையப்பா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். காவல்துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும் பீல் நகரத்தின் தலைமை காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 1ம் தேதி பதவியேற்கவுள்ளார். இது குறித்து நிஷ் கூறுகையில், ‘3000 காவலர்களை கொண்டுள்ள பீல் நகருக்கு ...
Read More »